Pages

Wednesday, December 5, 2012

அவசர தேவை:



அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பான சகோதரர்களே, இன்றைய காலக்கட்டத்தில் ஒற்றுமை என்ற வார்த்தை ஷிர்க்கை விடவும் ஒரு பாவமான வார்த்தையாக ஆகி விட்டது.
முன்பெல்லாம் தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மெச்சி பேசினார்கள். காரணம் சகோதரத்துவம் , ஒற்றுமை, மனிதர்களுக்கு மதிப்பளித்து நடப்பது போன்ற பல காரணங்களுக்காக... தந்தை பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது இஸ்லாத்தில் இணையும் அடுத்த நிமிடமே தீண்டாமை உன்னை விட்டு சென்று விடுகிறது என்றார்.
இன்றோ... எதுவெல்லாம் சத்திய மார்க்கத்தில் நிறைந்து இருந்ததோ அவை அனைத்தும் நிச்சயம் இல்லை. எதுவெல்லாம் சத்திய மார்க்கத்தில் இல்லாமல் இருந்ததோ அவை அனைத்தும் இருக்கிறது என்று நமது செயல்களின் மூலம் நிருபித்து கொண்டு இருக்கிறோம்.
இஸ்லாத்தில் பிரிவுகள் என்பது அறவே இல்லை என்றே, இன்றும் பல இயக்கங்களும், குழுக்களும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய மக்களிக்கிடையே பிரிவை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
குரான் ஹதிஸை பின் பற்றினால் ஒற்றுமை ஏற்படும் என்பார்கள். அது நம்மை ஏமாற்ற அவர்கள் வைக்கும் போலி வாதம். உண்மையில், அவர்களின் இயக்கத்தை பின்பற்றினால் மட்டுமே  நம்மிடத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை கேளுங்கள்:
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)
மேலும் ஒரு வசனத்தில்:
எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை, அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளது; அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)
இரு இயக்கங்களுக்குள் உள்ள முரண்பாட்டை பார்த்தீர்களேயானால் அந்த அந்த இயக்க தலைவர்களுக்குள் தான் அதிக முரண்பாடு இருக்கும். இதனால் பாதிப்படைவதோ சாதாரண முஸ்லிமே.
கீழே உள்ள ஹதிஸை சற்று புரிந்து தெளிவாக படியுங்கள் சகோதரர்களே...
ஒரு முறை நபிஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் ‘ஓ’ அன்சாரிகளே! எனக் கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் ‘ஓ’ முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் “ஏன் ஜாஹிலியத்தின் அழைப்புகளை விடுக்கிறீர்கள்!” எனக் கேட்டார்கள்.”அவர்களுக்கிடையில் என்ன தகராறு?” என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் ‘இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் பல ஹதிஸ்களில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம்.
இவ்வாறே நான் சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், அந்த ஜமாஅத், இந்த ஜமாஅத் என்று கூறிக்கொண்டு; நாம் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்வதை மறக்கடிக்கிறார்கள்.
அல்லாஹ் நம்மை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதையே விரும்புகிறான். 
அல்லாஹ்வின் பாதையில்  (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து, நிச்சயமாக, நான் முஸ்லிம்களில் உள்ளவன், என்று சொல்பவனை விட சொல்லால் அழகியவன் யார்?” (41:33)
மேலும் இன்று இயக்கத்துக்காக மக்கள் சண்டை போட்டுக் கொண்டு மரணிக்கிறார்கள். அவர்களின் நிலை அல்லாஹ்விடதிலே உள்ளது. எதற்கும் கீழே குறிப்பிட்டுள்ள ஹதிசையும் படித்து விடுங்களேன்.
"யாரொருவர் ஒரு பிரிவின் கீழ் இருந்து அதற்காகப் போராடி அதன் நிமித்தமாகவே கோபமுற்று அதற்காக அழைப்பு விடுத்து அதற்கு உதவி செய்துவரும் வேளையில் கொல்லப்படுகிறாரோ அவர் ஜாஹிலியாவிலேயே மரணக்கிறார்" என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (நஸயீ)
சகோதரர்களே, ஒற்றுமை எனபது நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. இன்றைய தலைவர்களின் கோவதுக்காகவும், அவர்களின் பிடிவாத குணதிர்க்காகவும் உங்களின் அமல்களை இழந்து விடாதீர்கள்.
நீ எதையும் சொல்லிக்கோ... நா அப்டிலாம் இருக்க மாட்டேன் என்று எவெரேனும் கூறினால், அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாத்துஹூ...

No comments:

Post a Comment