Pages

Friday, November 16, 2012

இறுதி பேருரை...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அன்பார்ந்த சகோதரர்களே.. உலக தலைவர்களில் இதுவரை இப்படி ஒரு உரையை எவரும் நிகழ்த்தியதில்லை, இனி எவரும் நிகழ்த்த போவதில்லை என்று நாம் கூறிக் கொள்ளலாம். அதுதான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய இறுதி பேருரை.

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணம் வரை எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்பதை சொல் மற்றும் செயல் மூலம் நமக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தந்துள்ளார்கள்.

நேர் வழி பெற்ற மக்கள் மீண்டும் வழி கேட்டின் பக்கம் சென்று விட கூடாது என்பதற்காக கடைசி ஹஜ்ஜின் போது ஒரு உரை நிகழ்த்தினார்கள். அதுதான் நபிகளாரின் இறுதி பேருரை.

அந்த பேருரையில் பல முக்கியமான செய்திகளை மக்களுக்கு அறிவித்தார்கள். இதைதான் நாம் இங்கே காண இருப்பது:

1. சகோதரத்துவம்:


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி பேருரையில் முக்கியமான உபதேசங்களில் ஒன்று ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியதாகும்.

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, "இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" எனக் கேட்டார்கள். அதற்க்கு மக்கள் "அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிவர்" என்றனர். உடனே அவர்கள், "இது புனித மிக்க தினமாகும். இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்றதும் மக்கள் "அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிவர்" என்றனர். உடனே அவர்கள், "இது புனித மிக்க நகரமாகும்" என்றார்கள். "இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா? என்றதும், மக்கள்  "அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிவர்" என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் "இது புனித மிக்க மாதமாகும்" என்று கூறி விட்டு உங்களுடைய இந்த புனித நகரத்தில் புனித மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ, அது போலவே அல்லாஹ்வும் உங்கள் உயிர்களையும், உடமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கி உள்ளான்" என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி), புஹாரி 1741, 1742).

சகோதரர்களே.. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிமின் மானத்திலோ, உயரிலோ விளையாடக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறி இருகிறார்கள். ஒரு முஸ்லிமின் மானமும், மரியாதையும் மற்றொரு முஸ்லிமுக்கு புனிதமானவை. ஒருவர் மற்றொருவருக்கு சகோதரர் ஆவார் என்பதை மேலே உள்ள நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரையின் மூலம் நாம் அறிய முடிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி பேருரையின் உபதேசங்களை வலியுறுத்தி வரக் கூடிய மேலும் ஒரு ஹதிஸை பார்ப்போம்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் மற்றவருக்கு மோசம் செய்ய மாட்டார். அவரிடம் பொய் கூற மாட்டார். அவருக்கு உதவி செய்வதை விட்டு விட மாட்டார். ஒவ்வொரு முஸ்லிமின் கண்ணியமும், செல்வமும், இரத்தமும் மற்றொரு முஸ்லிமின் மீது பறிப்பது ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) இருக்கிறது. இறையச்சம் இங்கு இதயத்தில் உள்ளது. ஒரு முஸ்லிமான சகோதரரை இழிவாக எண்ணுவதே மனிதர்களுக்குத் தீமையால் போதுமானதாகும். (அபூஹுரைராஹ் (ரலி ), திர்மிதி - 1927).

மேலே உள்ள இந்த ஒரு ஹதிஸ் போதாதா?.. ஒரு சகோதரரை இழிவாக நினைத்தாலே தீமை ஆகி விடுகிறதே!.. சேற்று வைத்த சிறு சிறு நன்மைகளும் இதனால் அழியும் வாய்ப்பாகிவிடுகிறதே..

சிந்திப்போம்..

இன்ஷாஅல்லாஹ் தொடருவோம்...

No comments:

Post a Comment