Pages

Thursday, December 20, 2012

ஃபேஸ்புக் - FACE BOOK




அஸ்ஸலாமு அலைக்கும்.

வழக்கமாக நான் ஒரு பதிவை ஆரம்பம் செய்யும்போது அன்பான சகோதரர்களே என்று ஆரம்பிப்பேன். ஆனால் இந்த பதிவில் சகோதரர்களே மற்றும் சகோதரிகளே என்று ஆரம்பம் செய்ய விரும்புகிறேன்.

இன்று நம்முடைய இளைஞர்கள் மற்றும் இளைங்கிகள் மிகப் பெரிய ஒரு விசயத்துக்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்களும் இவ்வாறே அடிமைப்பட்டு இருக்கிறார்கள்.

அதுதான் FACEBOOK எனப்படும் மூஞ்சிபுத்தகம். (எவ்வளவு நாள்தான் முகப்புத்தகம் என்று சொல்வது)

நம்முடைய மார்க்க அறிஞர்களால் இந்த facebook ஆனது ஹலாலா? ஹராமா? என்று ஃபத்வா கொடுக்க கூடிய அளவுக்கு இந்த விசயம் சென்று விட்டது என்றால் எதற்க்காக என்று யாரேனும் யோசித்தது உண்டா?.

எதற்காக ஒரு அறிஞர் இந்த மூஞ்சி பதக்கத்தை ஹராம் என்று கூறுகிறார் என்று சிந்தித்து உண்டா?.

நானும் இவ்வளவு நாட்களாக இந்த விசயத்தை பற்றி சிந்திக்கவும் இல்லை. யோசித்ததும் இல்லை. வழக்கம் போல் இன்டர்நெட் இல் மார்க்கம் சம்மந்தமாக சில விசயங்களை தேடியபோது ஒரு வெப்சைட்டில் இதைப்பற்றிய தகவல்களும், கலந்துரையாடலும் இருந்தது.

அதில் சிலர் ஹலால் என்றும், இன்னும் சிலர் ஹராம் என்று எழுதி இருந்தார்கள். நாம் ஹலால், ஹராம் விசயத்துக்கு செல்ல வேண்டாம்.

இந்த மூஞ்சி புத்தகம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றி எல்லாம் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். இதனால் சந்தோசம் அடைந்தது யார்?, இதனால் பயன் பெற்றது யார்? தான் சொன்னதை நிறைவேற்றிக் கொண்டு இருப்பவன்  யார்?

இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலை தந்துவிடலாம். அவன்தான் சைத்தான்.

அன்பான இஸ்லாமிய சகோதரர்களே, சகோதரிகளே. நாம் facebook இல் உலா வரும்போது நமது அருகில் சைத்தானும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். மௌசை பிடித்துக் கொண்டு இருப்பது நான் தான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருந்தாலும், உண்மையில் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு உங்களை வழி நடத்துவது சைத்தான்.

Facebook எனப்படும் மூஞ்சி புத்தக்கத்தை நான் மார்க்க விசயத்துக்காக பயன்படுத்த போகிறேன் என்ற எண்ணத்துடன் நீங்கள் தொடங்குவீர்கலேயானால், உங்கள் என்னத்துக்கு தகுந்தப்படி அதனை செயல் படுத்துவீர்கள்.

அதன்படி இல்லாமல் மக்களை கவருவதற்கு, குறிப்பாக ஆண்கள் பெண்களை கவருவதர்க்கும், பெண்கள் ஆண்களை கவருவதர்க்கும் பயன் படுத்தினால் தவறு ஆகிறது.

சைத்தான் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றாமல், மதிக்காமல் நடந்ததால் அல்லாஹ் அவனை வெளியேற்றுகிறான். அப்பொழுது அவன் கியாமத் நாள் வரை நம்மை வழிகேடுப்பதற்க்கு அனுமதியும் வாங்கி விடுகிறான். அதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான். (38 : 77)
“என் இறைவா! அவர்கள் உயிர்ப்பிக் கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “அறியப்பட்ட நேரத்தை உள்ளடக்கிய நாள் வரை நீ அவகாசம் கொடுக்கப்பட்டவன்” என்று இறைவன் கூறினான். (38:79)
இவ்வாறு வழி கெடுப்பேன் என்று அவகாசம் பெற்றுக் கொண்டவன் சும்மாவா இருப்பான். நீங்கள் செல்லக்கூடிய வழியில் எல்லாம் அமர்ந்து கொள்வானே!...
facebook ஓபன் செய்யும்போது சைத்தான் உக்கார்ந்து கொண்டு முதலில் ஆசை வார்த்தைகளை தான் போட செய்வான்.
ஒரு பெண் அவளுடைய மூஞ்சி புத்தக்கத்தில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று போட்டு விட்டால் போதும்... விழுந்து அடித்துக்கொண்டு வ அலைக்கும் சலாம் என்று போட்டு நிரப்பி விடுவார்கள். சொன்னவளோ யார் என்றே அவர்களில் பலர் அறிந்து இருக்க மாட்டார்கள்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. Today, I am very sad அப்டின்னு ஒரு கமெண்ட் விழுந்துட்டா போதும்... தன்னுடைய தாய், தந்தை, தங்கை, அண்ணன், தம்பி, மனைவியை கூட அப்படி விசாரித்து இருக்க மாட்டான்... ஒரு அந்நிய பெண்ணை விசாரிப்பான்.
எவரும் தானாக தவறு செய்ய முன் வருவதில்லை. சிலரின் தூண்டுதல் காரணமாகவே தவறு செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
அவ்வாறே, ஒரு பெண்ணானவள் அந்நிய ஆண்களிடம் குலைந்து பேசவே கூடாது. அந்நிய ஆண்களிடம் மிகவும் கண்டிப்புடனே பேச வேண்டும். இதுவே நமக்கு மார்க்கம் சொல்லி தரும் பாடம்.
ஆனால், இந்த மூஞ்சி புத்தகத்திலோ... சுபஹனல்லாஹ்... எதை செய்யக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அதையே செய்கிறார்கள். முதலில் பிரதர் என்றும் சிஸ்டர் என்றே ஆரம்பம் ஆகும். ஆனால் எவரும் எவருடைய உள்ளத்தையும் அறிய முடியாதே...
படைத்த ரப்புல் ஆலமீனிடம் சைத்தான் என்ன கூறினான் தெரியுமா?...
அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (4:118-119)
படித்தீர்களா சகோதரர்களே, சகோதரிகளே.. என்ன விளங்கி கொண்டீர்கள். அவன் நமக்கு ஆசை வார்த்தை கூறுவானாம். பிரதர் என்பதும் சிஸ்டர் என்பதும் ஆசை வார்த்தை இல்லையா?. முதலில் இப்படிதானே ஆரம்பம் ஆகிறது.
அப்புறம் என்ன... சாப்டியா?.. என்ன சாப்டே?.. தூங்குனியா?.. எப்டி தூங்குனே?.. என்று கேட்டுக்கொண்டே சைத்தான் முழுவதுமாக நுழைந்து விடுவான்.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்து இருக்கும் பொழுது சைத்தானும் மூன்றாவதாக உடன் இருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களே... நீங்கள் மூஞ்சி புத்தகத்தில் உலா வருகிறீர்கள். ஆண்கள் அந்நிய பெண்களிடமும், பெண்கள் அந்நிய ஆண்களிடம் சகஜமாக பேசுகிறீர்களே.. அப்பொழுது உங்கள் உடன் யார் இருக்கிறார்கள். நீங்கள் நினைப்பதோ யாரும் இல்லை என்று... ஆனால் உண்மை என்ன?
நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்)(7:16-17)
உண்மையா?.. இல்லையா?.. இதுதானே பெரும்பாலும் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த facebook ஆல் இன்று எத்தனை பேர் வழி கெட்டு கெடக்கிறார்கள். ஆயிஷா என்றும் ஃபாத்திமா என்றும் பெயரை வைத்துக் கொண்டு இன்று எத்தனை சகோதரிகள் மூஞ்சி புத்தகத்தில் ஹிஜாப் இல்லாமல் போட்டோவை போடுகிறார்கள். அந்நிய ஆண்களுடன் சகஜமாக அரட்டை அடிக்கிறார்களே. இப்படிப்பட்டவர்கள் இந்த பெயரை வைத்துக் கொள்ள என்ன தகுதி இருக்கிறது.
அவள் ஒரு அந்நியப் பெண்ணாக இருந்தாலும் மார்க்கம் சொல்லக்கூடிய செய்தியை சொல்லி விடுவது நன்று. நன்மையை ஏவி தீமையை தடுக்கிறோம் என்று கூறிக் கொண்டு இப்படிப் பட்ட விசயங்களை கண்டும் காணாமல் இருந்தோமேயானால், நாம் பெரும் அநியாயக்காரணாக ஆகி விடுவோம்.
பிறகு நன்மையையை ஏவுகிறோம், தீமையை தடுக்கிறோம் என்று கூறிக் கொள்வதில் எந்த தகுதியும் இல்லை.
சகோதரர்களே, சகோதரிகளே சற்று சிந்தியுங்கள். நாம் என்னதான் தவறுகளும், அநியாங்களும் செய்தாலும் நம்மை படைத்தவன் மன்னிக்கிறேன் என்கிறான். அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே.. பாவ மன்னிப்பு கேட்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (எனது இறைவா) உனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக ஆதமுடைய மக்கள் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களை நான் வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன் என்று இப்லீஸ் இறைவனிடம் கூறினான். அதற்கு இறைவன் எனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக அவர்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடும் காலமெல்லாம் அவர்களை நான் மன்னித்துக்கொண்டே இருப்பேன் என்று கூறினான். (அபூசயீத் அல்குத்ரீ (ரலி)-அஹ்மத் 10814)
இப்பொழுது நீங்களே உங்கள் முகத்தை பார்த்துக் கொள்ளுங்கள். தெரிவது நீங்களா? அல்லது சைத்தானா? என்று.
ஃபேஸ்புக் - சைத்தானின் முகம். (பயன் படுத்துவதை பொறுத்தே!...)
ஜசகல்லாஹ்...

No comments:

Post a Comment