Pages

Saturday, December 8, 2012

ஆயுதம்: தொடர்ச்சி 3


அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் .

ஆயுதம் என்ற தலைப்பில் நாவை பேணுவதின் அவசியத்தை பற்றி பார்த்து கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியை இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.

ஒருவனது நாவுதான்  மறுமையின் ஈடேத்திர்க்கும் அல்லது அழிவிற்கும் காரணமாகி விடுகிறது.

"ஒரு அடியான் சிந்திக்காமல் ஒரு வார்த்தையை பேசுகிறான். அதுவோ அவனை நரகை நோக்கி கிழக்கிற்கும், மேற்கிக்குமிடையில் உள்ள தூரமளவு நெருக்கி விடுகின்றது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைராஹ் (ரலி) - புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

மற்றொரு அறிவிப்பில்,

ஒரு அடியான் அல்லாஹ்வின் திருப்தியைத் தரும் ஒரு வார்த்தையைப் பேசுகிறான். அவன் அந்த வார்த்தைக்கு எந்த மதிப்பும் கொடுத்திருக்க மாட்டான். எனினும் இதன் மூலம் அல்லாஹ் அவனது தரஜாத்தை உயர்த்தி விடுகிறான். மற்றொரு அடியான் அல்லாஹ்வின் வெறுப்பைத் தேடித்தரும் வார்த்தையைப் பேசுகிறான். தான் பெரிய தவறான வார்த்தையைப் பேசியதாக கருதியிருக்க மாட்டன். எனினும் இதன்மூலம் அவன் ஜஹன்னம் எனும் நரகை நோக்கி வீசப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைராஹ் - புஹாரி)

இன்று நம்மில் நடக்கும் பல விசயங்களை நாம் பார்க்கிறோம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை திட்டுவதற்காக ஒரு வார்த்தையை பேசுகிறான். அவனுக்கு அது ஒன்றும் பெரிய வார்த்தையாக தெரிவதில்லை. ஆனால் அல்லாஹ்விடமோ அது வெறுப்பை தேடி தரும் வார்த்தையாகி விடுகிறது. இதன் மூலம் மறுமையில் கெடைப்பதோ நரகம்.

மனிதனது பேச்சு அவனது நல்லரங்களைக் கூட அழித்து விடும் என்பதை நன்றாக நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறும் ஒரு வசனத்தை படித்து படியுங்கள் சகோதரர்களே,

இனிய சொல்லும் மன்னித்தலும் நோவினை தொடரும் தர்மத்தை விடச் சிறந்ததாகும். அல்லாஹ் (எவரிடத்திலும் எவ்விதத்) தேவையுமற்றவன், மிகுந்த சகிப்புத் தன்மை உள்ளவன். (2:63)

முஆத் (ரழி) அவர்கள் அறிவிக்க கூடிய ஒரு ஹதிசிலும் நபி (ஸல்) நாவைப்பற்றி எச்சரிக்கிறார்கள். அதையும் படித்து விடுங்களேன்.

"அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தில் நுழையச் செய்து, நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஓர் அமலை எனக்கு கற்றுத்தாருங்கள்" எனக் கூறினேன். அதற்க்கு "நீர் மிகப் பெரியதொரு விசயத்தைப் பற்றிக் கேட்டுவிட்டீர். ஆயினும், எவருக்கு அல்லாஹ் இதை இலகுவாக்கினானோ, அவருக்கு அது இலகுவானதே" எனக் கூறிவிட்டு "நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்க கூடாது. நீ தொழுகையை நிலைநாட்டு. ஜகாத்தும் கொடுத்துவா. ரமலானில் நோன்பிரு. ஹஜ் செய் எனக் கூறிவிட்டு தொடர்ந்து "நல்லறங்களின் வாயில்களை உனக்கு நான் அறிவித்து தரட்டுமா?" எனக் கேட்டு "நோன்பு ஒரு கேடயமாகும். நீர் நெருப்பை அணைப்பது போல, தர்மம் பாவத்தை அழித்துவிடும்.

"நடு இரவில் ஒரு மனிதன் எழுந்து தொழுவதானது" என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பின்வரும் ஆயத்தை ஓதினார்கள்.

அவர்கள் இரவில் படுக்கையிலிருந்து தங்கள் விலாவை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும். பயந்தும் (அவனைப்) பிரார்த்தனைச் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்) காரியங்களுக்குக் கூலியாக, அவர்களுக்காக (சித்தப்படுத்தி) மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கண் குளிரக் கூடிய (சன் மானத்)தை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்காகச் சிதப்படுத்தப் பட்டுள்ளன) (32:16,17)

அதன்பின் நபி (ஸல்) அவர்கள், "காரியங்களில் மிக உன்னதமானது பற்றியும், தூண் பற்றியும், தலையாயது பற்றியும் அறிவிக்கட்டுமா?" என்றார்கள். நான் "இறைத் தூதர் அவர்களே சொல்லித் தாருங்கள்" என்றேன்.

அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் "காரியங்களில் மிக உன்னதமானது இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதன் தலையாயது, ஜிஹாத் ஆகும்" என்றார்கள்.

அதன் பின்னர், "இவை அனைத்தையும் அழித்து விடக் கூடியதை உனக்கு அறிவிக்கட்டுமா?" என்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஆம், கூறித்தாருங்கள்" என்றேன்.

அவர்கள் தமது நாவைப் பிடித்துக்காட்டி "இதனைப் பேணிக்கொள்" என்றார்கள்.

"இறைத்தூதர் அவர்களே! நாவைக் கொண்டு பேசுவதாலும், நாம் பிடிக்கப்படுவோமா?" என நான் வினவினேன்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், "உன் தாய் உன்னை இழந்து போகட்டும். மனிதர்கள் தம் நாவல் அறுவடை செய்தவைகளைத் தவிர, அவர்களை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளக் கூடியது வேறதுவும் உண்டா?" என்று கேட்டார்கள். (முஆத் (ரழி) - இப்னு மாஜா 3973, திர்மிதி)

சகோதரர்களே, இஸ்லாத்தின் 5 கடமைகளையும், இரவு வணக்கம், சதகா மற்றும் ஜிஹாத் போன்ற அனைத்து நல்லறங்களையும் கூட ஒரு மனிதனது நாவு அழித்து விடும் என்பதை மேற்கண்ட ஹதிஸ் நமக்கு எடுத்து கூறுகிறது.

இன்ஷாஅல்லாஹ் தொடருவோம்.

No comments:

Post a Comment