Pages

Saturday, September 10, 2011

அறிந்து கொள்ளுங்கள் 9/11

இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது. அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது. 

Tuesday, July 26, 2011

மாவீரன் மருத நாயகம்!!

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.
படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.

காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.
கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!

Sunday, June 26, 2011

அஸ்ஸலாமு அழைக்கும்


எனது புதிய ப்ளாக்-க்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இங்கு இஸ்லாமிய செய்திகள் மட்டும் பதியபடும். வேறு ஏதேனும் செய்திகள் தேடி வந்தவர்கள் பின்னங்கள் பிடரியல் அடித்து ஓடி விடவும். 

இந்த ப்ளாக் ஓர் இஸ்லாமிய செய்தி சேனலை போன்று செயல் பட வேண்டும் என்பதற்காகவே ஓபன் செய்தேன். நண்பர்களும், இஸ்லாமிய சகோதரர்களும் ஒத்துழைப்பும், உதவியும் தந்திடுமாறு கேட்டு கொள்கிறேன்.