Pages

Friday, December 14, 2012

அல்-குர்ஆன் vs மாயன் காலெண்டர்



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று உலகத்தில் அதிகமான மக்களால் பேசப்படும் ஒரு விசயம் 21-12-2012 இல் உலகம் அழிந்து விடும் என்பதுதான்.உலகத்தை படைத்த இறைவன் ஒரு நாளில் இந்த உலகம் அழிக்கப் படும் என்பதை குரானில் கூறுகிறான். ஆனால் அது எந்த நாளில்(தேதியில்) என்பதை நமக்கு  கூறவில்லை. அந்த நாளையும், நேரத்தையும் படைத்தவனே அறிவான்.

இருப்பினும், ஆங்கிலத்தில் 2012 என்ற திரைப்படம் வந்த பின்னரே இந்த மாயன் இனத்தவரைப் பற்றி மக்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் யார் என்பதைப்பற்றி இப்போது நாம் சுருக்கமாக பாப்போம்.

ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி மாயன் நாகரீகம் பண்டைய கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். கி.மு 2600 இல் மாயன் நாகரீகம் தோன்றியுள்ளது. அவர்கள் சூரியனையும், மழையையும் கடவுளாக வழிப்பட்டனர். மாயர்கள் மெட்னசு என்ற இருண்ட நரகம் ஒன்று இருப்பதாகவும், கூனிகா என்ற கடவுள் தவறுக்கு ஏற்ப தண்டனை கொடுப்பதாகவும் நம்பினர். கணிதம், கட்டிடக்கலை, இலக்கியம், வானியல் போன்றவற்றில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். கி.பி 950 இல் இந்த நாகரீகம் அழிந்து விட்டது. (thanks to wikipedia)

இப்படிப் பட்ட நாகரீதவர்கள் ஒரு காலெண்டரை உருவாக்கி அதன் அடிப்படையில் நாட்களை கணக்கிட்டு வந்தார்கள். அந்த காலெண்டர் ஆனது 21-12-2012 வரை கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இந்த தேதிக்கு பிறகு அவர்களின் நாட்களின் தொடர்ச்சி இல்லாததால் இத்துடன் உலகம் அழியப் போகிறது என்று மக்கள் கூறிக் கொள்கிறார்கள்.

நான் தேடியவரை மாயன் இனத்தவர்கள் அந்த தேதியில் தான் உலகம் அழியப்போகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை அறிய முடியவில்லை.

21-12-2012 க்கு பிறகு அவர்களின் நாட்கள் தொடரவில்லை என்பதால் இந்த நாளில் உலகம் அழிந்து விடும் என்று இன்றைய மக்கள் நம்புகிறார்கள்.

பதிவு சற்று நீளம்தான். சற்று பொருத்து கொள்ளுங்கள் சகோதரர்களே.

இந்த உலகம் அழியப் போகிறது என்பதைப்பற்றி அல்லாஹ் வின் வேதமும், அவனுடைய தூதரும் என்ன கூறுகிறார்கள் என்பதை பாப்போம்.

படைதவனாலேயே இந்த உலகம் அழிக்கப்படும். அது எந்த நாளில் என்பதை மனிதர்களான நாம் அறிய முடியாது. அதன் ஞானம் அல்லாஹ்விடத்திலேயே இருக்கிறது. அதை விட்டு விட்டு இந்த நாளில் உலகம் அழிந்து விடும் என்று கூறுவதற்கு நமக்கு அனுமதி இல்லை.

'(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் 'அது எப்போது வரும்?' என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்' (அல்குர்ஆன் 79:42-45).

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். 'அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்வைல.

மேலும் ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள். (அல் குர்ஆன் 78:17-18)

மறுமை எப்போது வரும்? என்ற கேள்விக்கு அல்லாஹ் 'வரைவில் வரும்' என்று பதில் கூறினாலும், மறுமை வரும் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்ற கேள்வி கூடவே எழத்தானே செய்யும். இதற்கும் அல்லாஹ் பதில் கூறவே செய்கிறான்.

'அவ்வாறல்ல, அவர்கள் அதை விரைவில் அறிவார்கள். மேலும் வெகு சீக்கிரத்தில் அதை அறிவார்கள்' (அல்குர்ஆன் 73:4-5).

சகோதரர்களே, அல்லாஹ்வின் தூதர் உலகம் அழிக்கப்படும் காலத்தை அறிவிக்கவில்லையே தவிர, அந்த நாளுக்கு முன்பாக நடக்கும் சில அடையாளங்களை மக்களுக்கு அறிவித்து இருக்கிறார்கள். அதில் மிகப்பெரிய அடையாளங்களான பத்து அடையாளங்கள் இருக்கிறது.

1. புகை மூட்டம்
2. அதிசயப் பிராணி
3. மேற்கில் சூரியன் உதிப்பது
4. தஜ்ஜாலின் வருகை
5. ஈஸா நபியின் வருகை
6. யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வருகை
7. கிழக்கே ஒரு பூகம்பம்
8. மேற்கே ஒரு பூகம்பம்
9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10. பெரும் நெருப்பு

இந்த 10 அடையாளங்களில் தஜ்ஜாலை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகப்படியாக அறிவித்து எச்சரித்து இருக்கிறார்கள்.

நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ உபைதா (ரலி) - திர்மிதீ, அபூதாவூத்)

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள். (இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி)-முஸ்லிம்)

அவனைப் பற்றி கூறுவதாக இருந்தால் மிகப் பெரிய பதிவையே போடலாம். இதில் முக்கியமான ஒரு விசயத்தை கவனியுங்கள் சகோதரர்களே. மறுமை நாளில் தஜ்ஜாலின் விசயத்தை தவிர மிகப் பெரிய விஷயம் எதுவும் இல்லை என்பதை கூறி இருக்கிறார்கள்.

அவன் பூமியில் இருக்கும் காலக் கட்டத்தை நாம் கணக்கெடுத்தாலே இந்த மாயன் கலெண்டர் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இதைப் பற்றி அறிய கீழே உள்ள ஹதிஸை படியுங்கள்.

தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் இருப்பான்? என்று நாங்கள் கேட்போது, 'நாற்பது நாட்கள் இருப்பான். ஒரு நாள், ஒரு வருடம் போன்றும், மற்ற நாட்கள் சாதாரண நாட்கள் போன்றும் இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி)-முஸ்லிம், திர்மீதி)

மாயன் காலெண்டரில் இருக்கும் கடைசி நாளானது முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அவ்வாறே அதுவே கடைசி நாளாக இருக்குமேயானால் இந்த தஜ்ஜாலின் அடையாளம் நடந்து கிட்டத்தக்க 1 மாதம் முடிந்து இருக்க வேண்டும். இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டுள்ள நாம், அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னதையே நம்ப வேண்டும்.

எவரோ சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் என்று நாம் அவர்களின் மீது நம்பிக்கை வைக்க கூடாது. அது மார்க்க அடிப்படையில் தவறும் கூட.

அவர்களின் அழிவையே கணிக்க முடியாத மாயன்களால் உலகத்தின் அழிவையும் கணித்திருக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை மாயன் காலெண்டரில் 21-12-2012 க்கு அப்புறம் நாட்கள் இல்லாததற்கு இந்த ஒரு காரணம் தான் இருக்க முடியும்.

மேலும் தொடர அந்த கல்வெட்டில் இடம் இருந்து இருக்காது.

அல் குர்ஆன் vs மாயன் காலெண்டர்: ரிசல்ட் எங்களுக்கு நல்லாவே தெரியும்.

1 comment:

  1. Assalamu alaikkum, i read this one, its really super, and very useful to everyone,the explanation is very super than u send this useful things, masha alla,insha alla all will end in good mananer ameen. all going good alhumdullilla.walaikkum salam

    ReplyDelete