Pages

Friday, December 14, 2012

ஆயுதம்: தொடர்ச்சி 4



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்...

ஆயுதம் என்ற தலைப்பில் நாவைப் பேணுவதின் அவசியத்தைப் பற்றி என்று நாம் பார்த்து கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியை புறம் என்று கோடிட்டு மேலும் காண்போம்.

ஒரு சமூகத்தின், குடும்பத்தின் கட்டுக்கோப்பையும், ஒற்றுமையையும் சிதைத்து பகைமையை ஏற்படுத்தும் ஒரு பண்பற்ற செயலாகவே புறம் இருக்கிறது.

இவை மட்டும் இல்லாமல் இருவருக்குமிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த இருவரின் ஒற்றுமையை குலைக்கும் செயலாகவும் புறம் இருக்கிறது.

இருவரிடையே பிரிவை ஏற்படுத்த எண்ணி உன்னை பற்றி அவன் இப்படி கூறினான், நீ இப்டி செய்ததாக கூறினான் என இருதரப்பிலும் கோல் மூட்டி விடுவதும், அவர் வெறுக்கக் கூடிய செய்தியைக் கூறுவதும் புறம் என்பதில் அடங்கி விடுகிறது.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள், "புறம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா?" எனக் கேட்டார்கள். அதற்க்கு நபித் தோழர்கள், "அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவார்கள்" என பதிலளித்தார்கள். அப்போது நபியவர்கள், "புறம் என்றால் உன் சகோதரன் வெறுக்கக்கூடிய ஒன்றைப்பற்றி உன் நினைவூட்டாகும்" என்றார்கள். அப்போது "நான் சொல்கின்றது அவரிடம் இருந்தாலுமா?" எனக் கேட்கப்பட்டதற்கு "நீ கூறுவது அவரிடம் இருந்தால்தான், அவர் பற்றி நீ புறம் பேசியுள்ளாய். அவரிடம் இல்லாததை நீ கூறியிருந்தால் அவர் மீது நீ அவதூறு கூறியுள்ளாய்" என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அபூஹுரைராஹ் (ரலி) - முஸ்லிம் 2589)

மேற்கண்ட நபி மொழி மூலம் நாம் ஒரு செய்தியை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவரிடத்தில் இருப்பதை கூறினால் புறம், இல்லாததை கூறினால் அவதூறு என்று இரு வேறுப்பட்ட தவறுகளை நமக்கு இந்த நபிமொழி கூறுகிறது.

இன்றும் பல சகோதரர்கள் ஒருவரிடத்தில் இருக்கும் குறைகளை அம்பலப்படுத்தி விட்டு "நாம் உள்ளதைதானே சொல்கிறோம், பொய்யா கூறினோம்" என்று தமக்கு தாமே கூறிக் கொள்கிறார்கள். அவ்வாரனவர்களுக்கு மேலே உள்ள நபிமொழி ஒரு சான்று.

அப்படி என்றால் உன்னிடத்தில் இந்த இந்த குறை இருக்கிறது என்பதையும், அதை திருத்தி கொள்ளுங்கள் என்பதை எவ்வாறுதான் கூறுவது என்று கேள்வி எழலாம்.

 மேலே உள்ள ஹதீஸ் நேரடியாக சென்று அவர் திருத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூறுவதை குறிக்கவில்லை. நாம் ஒருவரைப் பற்றி இன்னொருவரிடத்தில் சென்று அவரைப்பற்றி, அவரிடம் இருக்கும் குறையைப் பற்றி கூறுகிறோம். அதை அந்த சகோதரர் அறிய வரும்போது வெறுப்படைகிறார் என்றால் அதுவே புறம் என்ற குற்றத்தில் அடங்கிவிடுகிறது.

உயிருடன் இருப்பவர்கள் விசயத்தில் மட்டுமின்றி, இறந்தவர்களின் தவறுகளைக் கூறுவதும் தவறுதான்.

இறந்தோரை ஏசாதீர்கள். அவர்கள் செய்து, முன்பு அனுப்பிவிட்டதின் பக்கம் அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரழி) - புஹாரி).

ஆகவே சகோதரர்களே, நாவைப் பேணி தேவையற்ற விசயங்களை தவிர்த்து பாவத்தை சேர்த்து கொள்வதை விட்டும் தவிர்த்து கொள்வோம்.

இன்ஷாஅல்லாஹ் தொடருவோம்.

No comments:

Post a Comment