Pages

Sunday, June 24, 2012

அன்புக்குரிய பெற்றோர்களே!


Source From: www.muthupet.org

கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் பணி இன்றியமையாதது.

Monday, June 11, 2012

பயன் தரும் வியாபாரம்:

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே, வியாபாரம் பற்றி அல்லாஹ் நமக்கு என்ன கூறுகிறான் என்று இந்த பதிவில் பாப்போம். இன்று நம் மக்களில் பெரும்பாலானோர் வியாபாரம் செய்து கொண்டு வருவதை அறிவீர்கள். ஆனால், செய்யக்கூடிய வியாபாரம் ஹலாலா? அல்லது ஹராமா? என்பதை அறிந்து செய்வதுதான் சிறந்தது.

Saturday, June 2, 2012

கிறிஸ்தவ பெண்கள் ஆடை அணிவதில்...


Source from: www.thoothuonline.com

கிறிஸ்தவ பெண்கள் ஆடை அணிவதில் முஸ்லிம் பெண்களை முன்மாதிரியாக பின்பற்றவேண்டும் – காப்டிக் பிஷப்!


கிறிஸ்த பெண்கள் முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற அடக்க ஒடுக்க மிக்கவும், எளிமையானதுமான ஆடைகளை அணிய வேண்டும் என எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் கூறியுள்ளார்.
காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பிஷப் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார் என பிரிட்டனில் பிரபல பத்திரிகையான கார்டியன் கூறுகிறது.
பரிசுத்தமானவரான கன்னிமேரி(மர்யம்) முடியை முழுமையாக மறைப்பதற்காக முழுமையான ஆடையை அணிந்திருந்தார். பின்னர் ஏன் நீங்கள் இவ்வாறு அணிவதில்லை என்று கிறிஸ்தவ பெண்களிடம் பிஷப் கேள்வி எழுப்புகிறார்.
எகிப்தில் பெரும்பாலான பெண்கள் தலையை மறைப்பதுடன் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றனர். குறைந்த அளவிலான ஆடைகளை அணியும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அண்மையில் அதிகரித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், பிஷப்பின் கருத்துக்கு கிறிஸ்தவ பெண்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.


Thursday, May 31, 2012

சூனியம் (குரானுக்கு முரணானதா?)




அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான சகோதரர்களே, சூனியம் என்றால் என்ன? இஸ்லாம் இதை பற்றி என்ன கூறுகிறது என்று நான் சில அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட செய்திகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். சற்று மார்க்கம் தெரிந்த சகோதரர்களிடமும், சற்று நன்கு மார்க்க விசயம் தெரிந்த சில சகோதரர்களிடமும் நான் இதை பற்றி கேட்டேன். அதிலும் சில முரண்பாடுகள் இருக்கவே செய்தது. சில சகோதரர்கள் இருக்கு என்றார்கள். சிலர் இல்லை என்றார்கள். இன்னும் சிலரோ, நான் சில கேள்விகளை கேட்டதால், இருக்கு.... ஆனா இல்லை.... என்றார்கள். இருக்கு என்பவரும் குர்ஆன் ஹதிஸை ஆதாரமாக வைகிறார்கள். இல்லை என்பவர்களும் குர்ஆன் ஹதிஸை ஆதாரமாக வைகிறார்கள். நீ என்னப்பா சொல்ல வர. இருக்குங்கிரியா? இல்லைங்கிறியா? என்று கூறுகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

Saturday, April 28, 2012

நயவஞ்சகர்களின் துரோகம்:டிசம்பர் 6




அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர்களே, முஸ்லிம்களான நம் அனைவருக்கும் பாபரி மஸ்ஜித் பற்றி தெரியாமல் இருக்காது. சிறுவர்களிடத்தில் கூட டிசம்பர் 6 என்று கூறினால் "நம்மலே வேனில் கூட்டிகிட்டு போய் ஒரு கொடியை கையில் கொடுத்து நிற்க வைத்து கூட்டமாக கத்திவிட்டு வருவோமே" அந்த நாள்தானே என்று சரியாக சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு நமது சமூதாய இயக்கங்கள் போட்டி போட்டு கொண்டு போராட்டம் செய்து விட்டார்கள். இதனால்தான் இயக்கவாதிகள்: எனது பார்வையில் என்ற தொடரில் எனது அடுத்த தலைப்பாக நீயா? நானா? என்று வைத்து உள்ளேன்.

Thursday, March 29, 2012

காஷ்மீர் அதிர்ச்சியூட்டும் அடக்கத் தலங்கள்!

அஸ்ஸலாமு அழைக்கும்


http://www.samooganeethi.org என்ற இணையதளிருந்து 


காஷ்மீர் என்றாலே கடுங்குளிரையும் தாண்டிய ஏராளமான அதிர்ச்சிகள் உண்டு. சமீபத்தில் ஒரு முறையீடு தேசிய மனித உரிமைக் கழகத்தின் கதவைத் தட்டியது ராதாகாந்த திரிபாதி என்பவர் தான் இந்த அதிர்ச்சி கலந்த முறையீட்டை மனித உரிமை அமைப்பிடம் முன்வைத்தவர்.