Pages

Saturday, April 28, 2012

நயவஞ்சகர்களின் துரோகம்:டிசம்பர் 6




அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர்களே, முஸ்லிம்களான நம் அனைவருக்கும் பாபரி மஸ்ஜித் பற்றி தெரியாமல் இருக்காது. சிறுவர்களிடத்தில் கூட டிசம்பர் 6 என்று கூறினால் "நம்மலே வேனில் கூட்டிகிட்டு போய் ஒரு கொடியை கையில் கொடுத்து நிற்க வைத்து கூட்டமாக கத்திவிட்டு வருவோமே" அந்த நாள்தானே என்று சரியாக சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு நமது சமூதாய இயக்கங்கள் போட்டி போட்டு கொண்டு போராட்டம் செய்து விட்டார்கள். இதனால்தான் இயக்கவாதிகள்: எனது பார்வையில் என்ற தொடரில் எனது அடுத்த தலைப்பாக நீயா? நானா? என்று வைத்து உள்ளேன்.
சரி. இப்போ நாம் இந்த தலைப்புக்கு வருவோம். டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் என்பதை பல முஸ்லிம்கள் அறிந்து வைத்து இருகிறார்கள். அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் (அழைத்து வரப்பட்ட) முஸ்லிம்களிடம் பாபரி பள்ளி எங்கேப்பா இருக்கு என்று கேட்டால், அவர்கள் முழி லெப்ட், ரைட் என்று இடம் மாறும். தங்களது விரலால் தலையை சொரிவார்கள். லேசாக சிரிப்பார்கள்.

சற்று விஷயம் தெரிந்தவர்கள் அயோத்தி இல் இருக்கு என்று சொல்லிவிடுவார்கள். சரி அயோத்தி எங்கே இருக்கு என்று கேட்டால், மேலே சொன்ன அதே தான்.

அதனால் இந்த தலை சொரிவது, பேந்த பேந்த முழிப்பது நம்முடைய சமூதாய மக்களிடம் இருக்ககூடாது என்ற எண்ணத்தில்தான் பாபரி பள்ளியை பற்றி எனக்கு தெரிந்த, நான் படித்த, இன்டர்நெட்டில் தேடிய சில செய்திகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

1. பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது கி.பி.1528 இல். கட்டியவர், மன்னர் பாபர் அவர்களின் போர் படை தலைவர் மிர்பக்கி.
2. பாபரி மஸ்ஜித் அமைந்து இருந்த மாநிலம், உத்தர பிரதேசம். ( இப்போது உத்தர பிரதேசத்தில் இருக்கிற அயோத்தி, RSS சொல்லகூடிய அயோத்தி கெடையாது என்பதையும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்).
3. முதன் முதலில் ராமர் கோவில் கட்ட முயற்சி செய்தது 1883 இல்.
4. 1940 இல் பாபரி பள்ளி ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமா? சுன்னி முஸ்லிம்களுக்கு சொந்தமா என்ற தீர்ப்பில், பள்ளி சுன்னி முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று பள்ளி விசயத்தில் முதல் தீர்ப்பு வந்தது.
5. 1949 டிசெம்பர் மாதம் பள்ளிக்குள் சில சமூக துரோகிகளால் ராமர் சிலைகள் வைக்க பட்டது.
6. 1985 முதல் RSS, BJP, VHP போன்ற துரோகிகளின் இயக்கங்கள் துவங்க ஆரம்பித்தன.
7. 1991 ஆம் ஆண்டு உத்திர பிரதேச BJP அரசு, பாபரி மஸ்ஜிதின் 2774 ஏக்கர் நிலத்தை கையகப்படுதிகொண்டது.
8. 1992 மார்ச் மாதம், BJP யை சேர்ந்த கல்யான் சிங் அரசு பள்ளியை சுற்றி இருந்த மேலும் 42 ஏக்கர் நிலத்தை ராம ஜென்ம பூமி என்ற அறக்கட்டளைக்கு குத்தகைக்கு விட்டது.
9. 1992 டிசம்பர் 6 ஞாயிறு காலை கரசேவை என்ற பெயரால் வந்த RSS, VHP, BJP போன்ற துரோகிகளால் பாபரி பள்ளி முழுமையாக இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது.
10. பள்ளியை இடிக்க இந்த அயோக்கியர்கள் எடுத்து கொண்டது 7 மணி நேரம்.

சகோதரர்களே இங்கே நம் நாட்டுக்கு கெட்ட பெயர் வாங்கி தந்த ஒரு செய்தியை மிகவும் சுருக்கமாக எழுதிவிட்டேன். இதனை நாம் படிப்பது மட்டும் இல்லாமல், நமது குழந்தைகளுக்கு இந்த சம்பவங்களை சொல்லி அவர்களின் நினைவில் நிறுத்த வேண்டும். துரோகிகளை நமது குழந்தைகள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இல்லையென்றால், பீடீ உஷாவை மிஞ்சிவிடும் அளவுக்கு வேகமாக ஓடுபவர்களாக ஆகிவிடுவார்கள். (சொல்ல வருவது புரிஞ்சி இருக்கும்னு நெனைக்கிறேன்).

டிசம்பர் 6 ஆம் நாளை வருடத்துக்கு ஒருமுறை மட்டும் நினைவில் வந்து போகும் நாளாக இல்லாமால், எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளகூடிய நாளாக இருக்க வேண்டும். இந்த விசயத்தில் ஒற்றுமை என்ற படிப்பினையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு குறிப்பிட்டு காட்டுகிறான் என்றும் என்னிகொல்லுங்கள். ஒற்றுமையா... அதெல்லாம் நடக்காதுப்பா என்று திண்ணையில் உட்கார்ந்து பேசுபவர்களின் பேச்சை தூக்கி குப்பையில் போட்டு விட்டு, ஒற்றுமையை கடைபிடிப்பதில் நானும் ஒருவனாக இருப்பேன் என்று கூறிக்கொள்ளுங்கள்.

இந்தியா என்பது நம்முடைய நாடு. இதை யாருக்கும், யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது. மைனாரிட்டி என்று நம்மை சிறுமை படுத்த பார்கிறார்கள். நாம் மைனாரிட்டி இல்லை மெஜாரிட்டி மக்கள் என்று பழனி பாபா அவர்கள் சொன்னதை எடுத்து கொள்ளுங்கள். வீரா வசனம் பேசக்கூடிய இயக்கங்களை விட்டுவிடுங்கள். களத்தில் முன் வரிசையில் நிற்பவர்கள் நாமாகத்தான் இருப்போம். மைக்கை பிடித்து பேசுபவர்கள் எல்லாம் நிற்க மாட்டார்கள். ஓடி விடுவார்கள். பாவம் அவர்களுக்கு பேசத்தான் தெரியும். இயக்கத்துக்கு அடிமையாக இருந்தால், ஒற்றுமையாக எதிர்க்க கூட மாட்டீர்கள். எங்களுடைய கொடி எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேபோய்தான் நிற்போம் என்று அங்கேயும் பிரிவினை ஏற்படுத்துவீர்கள். இதனால் எதிராளிக்குதான் பயன். சைத்தான் நமக்குள் ஈசியாக பிரிவினையை ஏற்படுத்தி விடுவான். விடுவான் என்ன. ஏற்படுத்தி விட்டான். பல விசயங்களில் பிரிந்து இருந்தாலும், எதிராளிகளின் விசயத்தில் ஒற்றுமையாக இருந்து கொள்ளுங்கள் என்று இயக்கவாதிகளுக்கு கூறி கொள்ளுகிறேன்.

No comments:

Post a Comment