Pages

Saturday, June 2, 2012

கிறிஸ்தவ பெண்கள் ஆடை அணிவதில்...


Source from: www.thoothuonline.com

கிறிஸ்தவ பெண்கள் ஆடை அணிவதில் முஸ்லிம் பெண்களை முன்மாதிரியாக பின்பற்றவேண்டும் – காப்டிக் பிஷப்!


கிறிஸ்த பெண்கள் முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற அடக்க ஒடுக்க மிக்கவும், எளிமையானதுமான ஆடைகளை அணிய வேண்டும் என எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் கூறியுள்ளார்.
காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பிஷப் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார் என பிரிட்டனில் பிரபல பத்திரிகையான கார்டியன் கூறுகிறது.
பரிசுத்தமானவரான கன்னிமேரி(மர்யம்) முடியை முழுமையாக மறைப்பதற்காக முழுமையான ஆடையை அணிந்திருந்தார். பின்னர் ஏன் நீங்கள் இவ்வாறு அணிவதில்லை என்று கிறிஸ்தவ பெண்களிடம் பிஷப் கேள்வி எழுப்புகிறார்.
எகிப்தில் பெரும்பாலான பெண்கள் தலையை மறைப்பதுடன் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றனர். குறைந்த அளவிலான ஆடைகளை அணியும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அண்மையில் அதிகரித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், பிஷப்பின் கருத்துக்கு கிறிஸ்தவ பெண்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.


No comments:

Post a Comment