Pages

Monday, June 11, 2012

பயன் தரும் வியாபாரம்:

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே, வியாபாரம் பற்றி அல்லாஹ் நமக்கு என்ன கூறுகிறான் என்று இந்த பதிவில் பாப்போம். இன்று நம் மக்களில் பெரும்பாலானோர் வியாபாரம் செய்து கொண்டு வருவதை அறிவீர்கள். ஆனால், செய்யக்கூடிய வியாபாரம் ஹலாலா? அல்லது ஹராமா? என்பதை அறிந்து செய்வதுதான் சிறந்தது.


சூராஹ் அல்-பகராஹ் 2 வது அத்தியாயம் 275 வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை  ஹராமாக்கியிருக்கிறான்   

வியாபாரம் என்பதை ஹலால் என்று கூறினாலும், மற்றவர்களை ஏமாற்றாமல் செய்யக்கூடிய வியாபாரம்தான் ஹலால். எந்த வியாபாரத்தில் ஒருவன் ஏமாற்றபடுகிரானோ அந்த வியாபாரம் ஹராம். 

வியாபாரத்தில் ஏமாற்றுதல் என்பது மட்டு இருக்ககூடாது. அவ்வாறு மக்களை ஏமாற்றி செய்யக்கூடிய வியாபாரம் ஹராம். உதாரணத்துக்கு ஒருவர் அரிசி வியாபாரம் செய்கிறார் என்றால் அது ஹலாலான வியாபாரம்தான். ஆனால் விற்பனை செய்யும்போது நிலுவையில் மோசடி செய்தால் அது ஹராம் ஆகிவிடுகிறது. வாங்குபவன் எமாற்றப்படதவரை அது ஹலாலான வியாபாரம்தான். எந்த வியாபாரத்தில் ஒருவன் ஏமாற்றபடுகிறானோ அங்கே ஹராம் என்ற ஒன்று வந்துவிடுகிறது.

4 வது அத்தியாயம் 29 வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே உங்களில் ஒருவருக் கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தம் அல்லாமல் ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.

மேலும், 55 வது அத்தியாயம் 7 முதல் 9 வசனம் முடிய: மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக, ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிறைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.

50 ரூபாய்க்கு 1 கிலோ சீனி என்றால் (உதாரணத்துக்கு), 1 கிலோவோ அல்லது அதற்க்கு மேலோ எடை இருந்தால் குற்றம் இல்லை. ஆனால் குறைத்து விட்டால்..... அங்கேதான் மறுமையில் பதில் சொல்லக்கூடிய நபராக ஆகிவிடுகிறோம். 

பொதுவாக வியாபாரத்தில் எவ்வளவு லாபம் கெடைகிறது என்பதை எந்த வியாபாரியும் வாங்குபவர்களுக்கு தெரியப்படுத்த மாட்டான். அவ்வாறு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்; பொருளின் தன்மையை வாங்குபவர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமாகிறது. 

நாம் ஒரு செல்போனை விற்க விரும்புகிறோம். அந்த செல்போனானது ஒரு மாதம் மட்டுமே உழைக்கும் எனபது நமக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் வாங்குபவரிடம், ஒரு வருடம் உழைக்கும் என்று பொய் கூறி விற்பதை இஸ்லாம் தடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களைப் பரிசுத்தப் படுத்த மாட்டான் அவர்களுக்கு கடுமையான தட்டணையுண்டு என்று நபி(ஸல்) கூறினார்கள். “அவர்கள் நஷ்டம் அடைந்தவர்கள், அவர்கள் யார், யார்? என்று நான் கேட்டதும்” 1. செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டுபவன். 2. (பெருமைக்காக) தனது வேட்டியைத் தரையில் படுமாறு அணிபவன். 3. தனது சரக்குகளைப் பொய்ச் சத்தியம் செய்து விற்றவன் என்று கூறினார்கள்.  (முஸ்லிம், திர்மிதி)

பொய் சத்தியம் செய்து விற்பதுக்குதான் தடை என்று இல்லாமல், மோசடி செய்து வியாபாரம் செய்யவும் தடைதான்.

அபூஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலுக்கருகே சென்றார்கள். தமது கையை அந்த குவியலில் விட்ட போது விரல்களில் ஈரம் பட்டது அப்போது உணவு வியாபாரியே இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கவர் “அல்லாஹ்வின் தூதரே மழையில் நனைந்துவிட்டது என்றார்மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியல் பார் மோசடி செய்கிறாரோ அவர்க நம்மைச் சார்ந்தவரல்லர் எனவும் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி)

ஆகவே, விற்பவருக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே பொருளின் தன்மை பற்றி வாங்குபவர்களுக்கு தெரிவித்து விட வேண்டும்.

அப்போ ஹல்வா கடைகாரர்கள் எப்படி ஹல்வா செய்கிறார்கள் என்று சொல்லி வியாபாரம் செய்ய வேண்டுமா? என்றால் அவசியமில்லை. வியாபாரத்தில் செய்முறை கூறி வியாபாரம் செய்தால், வியாபாரம் என்ற ஒன்றே இருக்காது. ஹல்வாவை பொறுத்தவரை ஹல்வா ஹல்வாவாக இருக்க வேண்டும். அதுதான் வியாபாரம்.

ஆகவே சகோதரர்களே, வியாபாரத்தை பொறுத்தவரை இம்மையில் மட்டும் பலன் தரக்கூடிய வியாபாரமாக இல்லாமால், மறுமையிலும் பலனளிக்க கூடிய வியாபாரமாக செய்வதே இஸ்லாத்தின் படி சிறந்தது.

(அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

No comments:

Post a Comment