Pages

Monday, January 11, 2016

என்ன தலைப்பு சொல்லலாம் - 4


 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
ஒரு மாணவன் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து அவனை எடை போட முடியாது. அவ்வாறு எடை போட மாணவர்கள் ஒன்றும் பிராய்லர் கோழிகள் அல்ல. மதிப்பெண் எப்பொழுதும் ஒரு மாணவனை முழுமையாக்காது. 


பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் வரும் மாணவனால் ஏன் பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் வர முடியவில்லை. இதை நாம் எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறோமா? மதிப்பெண் மாணவனை முழுமையாக்காது என்று நான் கூறுவதற்கு இதுவே சான்று. 

நமது வாழ்வில் நடக்கும் சிறு சிறு விசயங்கள் கூட ஒரு செய்தியை சொல்லும். இப்பொழுது நான் சொல்ல போவது சிறு பிள்ளை தனமானதாக தோன்றலாம். ஆனால் எனக்கு அதில் நல்ல தகவல் கிடைத்தது. 

நண்பர் ஒருவருடன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். வெங்காய பச்சடி வைக்கப்பட்டது. வெங்காயம் மிகவும் சிறியதாக நறுக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

அதை பார்த்து நண்பர் கூறினார், "இந்த கடையில் ரொம்ப கவனிப்புடன் சமைக்கிறார்கள் என்றார்".

"எதை வைத்து கூறுகிறாய் என்றேன்",

"வெங்காய பச்சடியை இவ்வளவு பொடிசாக நறுக்க பொறுமை வேண்டும். அதை கூட சிரமம் பார்க்காமல் நல்ல முறையில் செய்து இருக்கிறார்கள். கண்டிப்பாக இங்கே தரமும் சுவையும் இருக்கும்" என்றார்.
 
சொன்னதை போன்றே பிரியாணி நன்றாக இருந்தது. 

நாம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் சாப்பிட்டதால் அவ்வாறு இருக்கும் என்ற மாற்றுக் கருத்து கொண்டு இருந்த நான், நாளை நான் வேறு ஒரு பிரியாணி கடைக்கும் அழைத்து செல்கிறேன். அங்கே வெங்காய பச்சடி இல்லாமல் பிரியாணி மட்டும் சாப்பிட்டு இந்த கடையின் தரம் எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றேன். ஆரம்பத்தில் தயங்கியவர் பிறகு ஒத்துக்கொண்டார். 

அடுத்த நாள் ஒரு கடைக்கு அழைத்து சென்று பிரியாணி ஆர்டர் செய்தோம். வெங்காய பச்சடி மட்டும் இப்போ கண்ணுலே காட்டாதீங்க பிரியாணி மட்டும் கொண்டு வாங்கன்னு உக்காந்து இருந்தோம். அந்த கடையில் பெரிய துண்டாக தான் வெங்காயம் இருக்கும்.
 
சாப்பாடு பரிமாறப்பட்டது.  நண்பர் கூறினார், "இந்த கடையில் ஏனோ தானோ என்று சமைக்கிறார்கள்" என்று கூறி சாப்பிடுவதை தொடர்ந்தார். ஆனால் உண்மையில் பிரியாணி நன்றாக இருந்தது. எனக்கு ஆச்சரியம் வெங்காயத்தை பார்க்காமல் எப்படி கூறினார் என்று. ஏனோ தானோ என்று விட்டு அடித்து இருக்கிறார் என்று நினைத்துக் கொன்டேன்.

சாப்பிட்டு முடித்து “இந்த கடையில் சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது. போட்டியில் தோத்து விடக்கூடாது என்று அவ்வாறு கூறினேன்” என்றார். மேலும் சொன்னார், “உள்ளே நுழைந்ததும் கை கழுவ போனபோது வேறு டேபிளில் பரிமாறப்பட்ட தட்டை பார்த்தேன். பெரிய சைஸ் வெங்காயம் தான் இருந்தது. ஆரம்பத்துலேயே தெரிந்துக் கொண்டு போட்டியில் ஜெயிக்க நன்றாக சமைத்து இருந்ததை; நன்றாக சமைக்கவில்லை என்று கூறினேன்” என்றார்.

ஆரம்பத்துலேயே சொன்னது போல் இது சில்லி மேட்டாராக தெரியலாம். ஆனால், முதலில் எனக்கு கிடைத்தது Information. இரண்டாவதாக அவருடைய செயல் காட்டியது verification. எந்த செயலுக்கும் முன்னாடி நாம் தீர ஆராய்வது அவசியம் என்பது காட்டியது.

மாணவர்களிடம் உள்ள திறமையை தீர ஆராய்வதும் ஒரு திறமைதான். மாணவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு முன் ஆசிரியர்கள் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
இத்துடன் முடித்துக்கொள்வோம். அடுத்து விளையாட்டை ஊக்குவிக்க ஒரு பதிவை ஆரம்பிக்கலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

No comments:

Post a Comment