Pages

Tuesday, September 30, 2014

வெள்ளைப்புலி



அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே! சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள zoo இல் இளைஞர் ஒருவரை வெள்ளைப்புலி கொன்றதை பற்றி செய்தியை அறிந்து இருப்பீர்கள். அதை பற்றி ஃபேஸ்புக், வெப்சைட் என்று பல இடங்களில் கருத்து பரிமாற்றம் நடந்தது.


பலர் அந்த இளைஞன் காப்பாற்ற பட்டு இருக்கலாம் என்றே கருத்து கூறி இருந்தார்கள். அது உண்மையாகே இருக்கலாம்.

சிலர் அந்த வெள்ளை புலியை கொன்று இருக்கலாம் என்றும், சிலர் கயிறு அல்லது கம்பை கொண்டு காப்பாற்றி இருக்கலாம் என்றும், நெருப்பை போட்டு காப்பாற்றி இருக்கலாம் என்று கூறி இருந்தனர்.

வரவேற்க வேண்டிய ஒன்று. அது மட்டும் இல்லாமல் இனி இது போன்ற சம்பவங்கள் நடந்தால் இவ்வாறு செய்து காப்பாற்ற முடியும் என்றும் நாம் நம்பலாம்.

ஆனால், இங்கே நாம் ஒரு உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இனி இது போல் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தாலும் இப்பொழுது சொன்ன இந்த கருத்துக்களை நிச்சயம் திரும்பவும் கூறிக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஒருவனுக்கு மரணம் இதன் மூலம் என்று நிர்ணயம் ஆகி விட்டால் அதனை எவராலும் தடுக்க முடியாது.

நம்ம படைத்த அல்லாஹ் அவனது திருமறையில் கூறுகிறான்: "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்" (3:185)

ஒரு மனிதனுக்கு அவனுடைய மரணத்தின் நேரம் வந்து விட்டால் நிச்சயம் அது அவனை அல்லது அவளை அடைந்தே தீரும்.

அங்கு உள்ள பலரும் அந்த இளைஞனை காப்பாற்றாமல் வீடியோ எடுப்பதிலும், என்ன நடக்க போகிறதோ என்ற பயத்திலும் இருந்து இருக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் மேலே சொல்லப்பட்ட முயற்சி அல்ல.

இங்கு முகநூல், வெப்சைட்டில் இப்டி செய்து காப்பாற்றி இருக்கலாம், அப்டி செய்து காப்பாற்றி இருக்கலாம் என்று எழுதும் நாம் அங்கு இருந்த அனைவரையும் முட்டாள்கள் என்பதை போலவும், கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து எழுதும் நாம் புத்திசாலி என்பதை போலவும் எழுதுகிறோம்.

அங்கு இருந்த அனைவரும் முட்டாள்கள் கிடையாது. அவர்கள் அந்த இடத்தில் இவ்வாறு சிந்திக்காமல் போனதுக்கு ஒரே காரணம் தான். அந்த இளைஞனுடைய மரணம் அந்த இடத்தில் நிச்சயம் ஆகி விட்டது.

இதனை நாம், இது போன்ற செயல்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு செயல் பட்டால், அல்லாஹ் நாடினால் மற்றவர்கள் காப்பாற்ற படலாம்.

அல்லாஹ் கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை, அவன் தடுத்ததை கொடுப்பவர் எவருமில்லை.

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை
சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு
மீட்டப்படுவீர்கள். அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு
அறிவிப்பான்’ (என்று) (நபியே!) நீர் கூறுவீராக”
(62:8)

ஜஸாகல்லாஹ்.
 

No comments:

Post a Comment