Pages

Wednesday, September 24, 2014

மீண்டும் அஜ்வா: ஒரு தகவல்

 
அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

அஜ்வா பேரித்தம் பழம் ஹதிஸ் நிராகரிக்க வேண்டிய ஹதிஸ் இல்லை என்பதை பல முறை நிருபித்தாகி விட்டது. ஆனாலும் அஜ்வா பேரித்தம் பழம் பற்றிய இரண்டாவது பதிவில் சகோதரர் ஒருவர் கமெண்ட் குடுத்து இருந்தார். நான் ஆரம்பத்திலேயே கூறியதை போன்று ஆல் ரெடி மைன்ட் செட் செய்து விட்டு வந்ததால் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் கமெண்ட் போட்டு சென்றுள்ளார். அந்த கமெண்ட் அந்த பதிவில் உள்ளது.


இதை அவருடைய முகநூல் பக்கத்திலும் பார்க்க முடிந்தது. அதற்க்கு மார்க்கம் அறிந்த மற்றொரு சகோதரர் சாத் விதி என்றால் என்னவென்றே உங்களுக்கு தெரியவில்லை என்று கூறியதும் அவருக்கு ஈ ஓடியது.

ஏழு, சில என்பது சாத் விதி படி நிராகரிக்க முடியாது என்பதற்கு அவருடைய தலைவரின் வெப்சைட்டை சுட்டிக்காட்டி தொழுகையில் விரல் அசைக்கும் ஹதிஸை படியுங்கள் என்று கூறினார். உண்மை என்னவென்று தெரிந்து இன்னமும் என்னோட முயலுக்கு மூன்று கால் என்ற நிலையில் தான் உள்ளார்கள்.

திருடன் அவனாக தான் திருந்த வேண்டும் என்ற பழமொழியை போன்று, இவர்களுக்கு நாம் எவ்வளவு தான் சொன்னாலும் இவர்கள் தாங்களாக தான் திருந்த வேண்டும்.

ஆகவே சகோதரர்களே! மார்க்கத்தை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க வேண்டும் என்று தயவு செய்து எண்ணாதீர்கள். சாத் விதி என்றால் என்னவென்று என்னை போன்ற ஹதிஸ் கலை அறியாத பலருக்கும் தெரியாது. அந்த பலகீனத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்காதீர்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மார்க்கத்தை யார் சிரமமாக்கி கொள்கிறாரோ அது அவரை மிகைத்து விடும் என்ற நபி(ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வையுங்கள். இஸ்லாம் ரொம்பவே எளிமையானா மார்க்கம்.

அடுத்து குரானுக்கு முரண் என்று இவர்கள் கூறியதற்கு ஆதாரம் இல்லாமல் கூறுவதாக கூறி இருக்கிறார். அன்பான சகோதரர்களே! உங்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன். உங்களில் எவேரேனும் எங்கள் ஜமாத்தார்கள் கூறி அதை நாங்கள் வீடியோ எடுத்து ஒளிபரப்பியதில்லை என்று எவேரேனும் கூறினால், நிச்சயம் நீங்கள் கூறி இருப்பதற்கு ஆதாரம் தரப்படும்.

பணம் கட்டி சவாலுக்கு அழைத்தால் தான் வருவேன் என்று எவரும் கூறி விடாதீர்கள்.

ஆகவே சகோதர்களே! ஹதிஸ் கலை பற்றி நன்கு தெரிந்து இருந்தால் மக்களுக்கு சொல்லுங்கள். இல்லையா வாயை மூடி மவூனமாக இருங்கள். தாவா செய்கிறேன் என்று கூறிக்கொண்டு, பொய்யராக இருக்க வேண்டாம் என்றும், என்னை போன்ற பல அப்பாவி இளைஞர்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ஜஸாகல்லாஹ்.

No comments:

Post a Comment