Pages

Thursday, September 18, 2014

அஜ்வா 2: சில விளக்கங்கள்:

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
அஜ்வா பேரித்தம் பழம் பற்றி எனக்கு சில கேள்விகள் வந்ததால் அதற்க்கு இங்கு பதில் அளிக்கிறேன். எனது அஜ்வா தேவையான ஒன்று என்ற பதிவை படித்து விட்டு ஒரு சகோதரர் என்னுடைய முகல்நூலின் இன்பாக்ஸ்க்கு வந்து கேள்விகள் கேட்டு இருந்தார். அந்த கேள்விகள் இவைகள் தான்.
1. எந்தச் சூனியமுமா ?
2. எந்த விஷமும் எந்தச் சூனியமுமா?
3. 7 அஜ்வா அல்லது சில அஜ்வா ?
4. இரவு வரை மட்டும் தான ? அல்லது நிரந்தரமா ?
5. எல்லா விஷத்திற்கும் சூனியத்திற்கும் இல்லையா ? நிவாரணமோ அல்லது விஷமுறிவோ தானா ?

இவைகளுக்கு ஹதிஸ்களை சான்றாக வைத்து கேட்டு இருக்கிறார். நன்று.


 எனது முந்தைய பதிவிலேயே காரணம் 3: இதை பற்றி உள்ள வேறு சில ஹதீஸில் சில பேரித்தம் பழம் என்று இருக்கிறது. இதில் ஏழு என்று இருக்கிறது. எண்ணிக்கையில் மாற்றம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். என்று எழுதி அதற்க்கு கீழேயே விளக்கமும் குடுத்து இருந்தேன்.
ஹதிஸ்களை அறிவிக்கும் சஹாபிகள் அறிவிக்கும்போது மெருகூட்டி அறிவிப்பதை பல ஹதிஸ்களில் பார்த்து இருக்கிறோம். ஒரு சஹாபி நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த துவா என்று ஒரு துவாவை கூறுவார். அதுவே மற்றொரு சஹாபி கூறும்போது சற்று மாற்றம் இருக்கும். இவ்வாறு மாற்றம் இருக்கிறது என்பதற்காக அந்த துவா ஹதிஸை நிராகரிக்க வேண்டுமா?
இன்னொரு உதாரணமும் தந்து இருந்தேன். லைலத்துல் கதர் பற்றி வந்து இருக்கும் பல ஹதிஸ்களில் கடைசி பத்து நாள் என்றும். இருபத்து ஒன்பது, இருபத்து ஏழு, இருபத்து ஐந்து என்றும் உள்ளது. அதற்காக லைலத்துல் கதூர் ஹதிஸை நிராகரிப்பர்களா என்று கேட்டு இருந்தேன். நிராகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஹதிஸ்கள் கீழே:

'நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) 'லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்த) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்' என்று கூறினார்கள்" என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். 

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள். 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அன்பான சகோதரர்களே! ஆரம்பத்தில் குரானுக்கு முரண் என்றார்கள். இதுவரை ஒரு வசனத்தை கூட இவர்கள் காட்டவில்லை. அது எடுபடவில்லை என்பதற்காக அறிவுக்கு பொருந்தவில்லை என்ற ரீதியில் இதை மறுக்க என்ன என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள்.

சகோதரர்களுக்கு கூறிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். கேட்டோம், கட்டுப்பட்டோம் என்று கூறுவது மட்டுமே ஒரு முஸ்லிமின் அழகிய செயல். எனது அறிவுக்கு பொருந்தவில்லை என்றால் நான் ஏற்க மாட்டேன் என்று கூறுவது சைத்தான் தீமையை அழகாக்கி காட்டுகிறான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படும் படி அன்போடு கூறிக்கொள்கிறேன்.

ஐந்து கேள்விகளுக்கும் தனித்தனியாக பதில் கூறவில்லை என்றாலும், அனைத்துக்கும் மொத்தமாக சேர்த்து பதில் கூறப்பட்டுள்ளது. இதுவும் புரியவில்லை என்றால், இவர்கள் ஆல்ரெடி மைன்ட் செட் செய்து விட்டு வந்தவர்கள் என்ற முடிவுக்கு தான் வர வேண்டும்.
ஏழு இருந்தால் என்ன? சில என்று இருந்தால் என்ன? அஜ்வா என்பது ஒரு நிவாரணம் தரும் மருத்துவ குணம் மிக்க பேரித்தம் பழம். விஷத்தில் பல விஷம் இருக்கும். காற்றில் விஷம் உண்டு, உண்ணும் உணவில் விஷம் உண்டு. அதை போன்றே சூனியத்திலும் பல சூனியம் இருக்கலாம். (அதை கற்றவர்கள் மட்டுமே அறிவார்கள்). இதனால் முரண் ஆகி விடுமா? ஏழு அஜ்வா பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நிரந்தர நிவாரணம் என்று ஹதீஸில் இல்லை. அது ஒரு நோய் நிவாரணி. அஜ்வா பேரித்தம் பழமானது, சாப்பிட்டு வருபவர்களுக்கு ஒரு ஆன்டி பயாடிக் என்ற முடிவுக்கு நிச்சயம் நாம் வரலாம்.
ஆகவே கேள்விகள் கேட்பவர்கள் குரானுக்கு முரண் படுகிறது என்ற முந்தைய வாதத்தின் கூற்றுப்படி முரண் படும் ஒரே ஒரு வசனத்தை கொண்டு வாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பதில் அளித்து விட்டேன் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன். ஜஸாகல்லாஹ்.

2 comments:

  1. அஜ்வா ஹதீஸை நாம் முன்முடிவோடு மறுக்கிறோம் என்று கூறுபவர்களுக்கு !!!!

    அஹ்லுஸ் சுன்னாஹ் அறிஞர்களின் ஹதீஸ் அணுகுமுறை தெரியவில்லை என்று கூறுவதோடு அல்லாமல் எதிர்த்தே பழகியதால் தமது காதுகளில் விழுவதில்லை போல

    ஒரு அறிஞர் சொனால் அது சரியா தவறா என்று தம் சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்தே பின்பே அதனை மறுக்க வேண்டும்.

    தம்மை அடையாலபடுதாத இணையத்தளம் நடத்துபர்கள் நாம் வைத்த அஜ்வா கேள்விகளுக்கு சரியான பதிலை வைக்காமல் . 5 கேள்விக்கு ஒரே பதில் என்று நாசுக்காக தமது திறமையை வெளிபடுதிகிரார்கள் .

    ஆயேஷ ரலி அறிவிப்பில் உள்ள மதனை நாம் குறை காணவில்லை மாறாக சாத் பின் அபி வக்காஸ் ரலி வழியாக வரும் ஹடீசையே மறுக்கிறோம்

    அதிலும் இப்னுல் மதினி அறிவிக்கும் ஹதீஸை ஏற்க கூடாது காரணம் மற்றவர்கள் 7 அஜ்வா என்று சொல்வதற்கு மாற்றமாக அவர் சில அஜ்வாக்கள் என்கிறார் என்பது மூல நூலில் கூறப்பட்டுள்ளது

    சாத் விதிப்படி அவரின் அறிவிப்பு பலஹீனம் அடைகிறது

    மற்றொன்று குரானுக்கு முரண் என்று நாம் கூறியதாக பரப்புகிறார்கள் . நாம் அவ்வாறு கூறியதற்கு அவர்கள் தான் ஆதாரம் பதிய வேண்டும்

    இருப்பினும் குரானுக்கு ஏன் முரண் என்னும் அடிப்படை தெளிவாக கூறுகிறோம்

    அல்லாஹ் பொய் சொல்ல மாட்டான் அல்லாஹ்வ்ன் தூதரும் பொய்யர் அல்ல எனவே

    அஜ்வா பலத்தை தின்பதன் மூலம் எந்த விஷமும் எந்த சூனியமும் இடரளிகாது என்னும் மதன் சத்திய குராநிர்க்கு முரணான பொய் .

    இமாம் இப்னு கசீர் கூறும் உசூலை அவர்கள் செவி மடுகிரார்களா என்றாவது பொறுத்திருந்து பார்ப்போம்

    இமாம் இப்னு கதீர் அவர்களின் கூற்று:

    "அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் என்றோ ஹசன் என்றோ சட்டம் சொல்வதால் ஹதீஸின் "மதன்" ஸஹீஹ் ஹசன் என ஆகவேண்டும் என்பது அவசியம் இல்லை"

    والحُكم بالصحة أو الحُسن على الإسناد لا يلزم منه الحُكم بذلك على المتن

    இமாம் இப்னு தைமியாவின் மாணவர் இமாம் இப்னு கதீர் அவர்கள் தனது இக்திசார் உலூமுல் ஹதீஸ் என்ற நூலில் இதனை பதிந்துள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. http://yenadhumarkkam.blogspot.ae/2014/09/blog-post_24.html

      Delete