Pages

Tuesday, September 9, 2014

சபித்தல்:



அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த பதிவானது சாபம் விடுவதை பற்றியது.. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சகட்டு மேனிக்கு சாபம் இடுவது இன்று ஃபேஷன் ஆகிக் கொண்டு வருகிறது.

சாபம் என்றால் ஏதோ வாழ்த்து என்பதை போன்று நினைத்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையின் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சபிக்க கூடாது என்பதே விதி. அதற்க்கு கீழே உள்ள ஹதிசே சான்று.

ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்

சிலர் கொஞ்சம் வித்தியாசமாக அல்லாஹ்வின் கோபம் இவர்கள் மீது இறங்கட்டும் என்றும் கூறுகிறார்கள். அதற்க்கு விளக்கத்தை அடுத்த ஹதீஸில் படியுங்கள்.

‘அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

இவ்வாறு சாபம் இடுவது பாவமாகும். இது இஸ்லாத்தில் வெறுக்கும் படியான ஒரு செயல். சாபம் என்ற சொல்லை கேள்விப்பட்டாலே நம்மவர்களுக்கு பெண்கள் தான் அதிகம் யாபகம் வருவார்கள்.

ஆனால் இன்றோ சில இயக்கவாதிகள் சகட்டு மேனிக்கு சபித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ என்னை சபித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

கேட்டு வாங்குவது மட்டுமின்றி சாபமிடச் செய்து மற்றவர்களையும் பாவத்தின் பக்கம் தள்ளுகிறார்கள்.

ஆகவே சபித்தல் என்ற தீய செயலில் இருந்து நாம் விழகி அழகிய முறையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாக..

No comments:

Post a Comment