Pages

Monday, September 1, 2014

அஜ்வா: தேவையான ஒன்று

 
 
 
அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே! இன்று அஜ்வா பேரித்தம் பழம் பற்றிய ஹதிஸ் மறுக்கப்பட்டு வருவதால் இந்த பதிவை வைக்கிறேன். அந்த ஹதிஸ் இது தான்.

தினந்தோறும் காலையில் ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5445

 
இந்த ஹதிஸ் சஹிஹ் என்ற தரத்தில் உள்ள ஒரு ஹதிஸ். இது அறிவுக்கு பொருந்தவில்லை என்று சிலர் மறக்கலாம். அவர்களின் அறிவுக்கு பொருந்தவில்லை என்ற காரணத்தால் நாம் இந்த ஹதிஸை மறுப்பது அல்லாஹ்வுடைய தூதரின் வார்த்தையை மறுப்பது ஆகும்.

இந்த ஹதிஸ் குரானுக்கு முரணானது என்று சிலர் சொல்லுகிறார்கள். குரானின் எந்த வசனத்துக்கு முரணாக உள்ளது என்று கேட்டால் பதில் இல்லை. காரணம் குரானுக்கு கடுகளவு கூட இந்த ஹதிஸ் முரண்படவில்லை.

மற்றொரு காரணம்: அப்படி என்றால் இந்த பழத்தை சாப்பிட்டு விட்டு விஷம் குடியுங்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் இந்த ஹதிஸை ஏற்கிறோம் என்கிறார்கள்.

ஒருவேளை இந்த ஹதீஸில் அஜ்வா பழம் சாப்பிட்ட பிறகு விஷம் குடித்தால் கூட உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று இருக்குமேயானால் ஒவ்வொரு முஸ்லிமும் இதை செய்து காட்டி இருப்பான். நமது மார்க்கம் அழகிய மார்க்கம். மடத்தனமான எந்த செயலையும் செய்ய சொல்லி நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

அடுத்த காரணம்: இதை பற்றி உள்ள வேறு சில ஹதீஸில் சில பேரித்தம் பழம் என்று இருக்கிறது. இதில் ஏழு என்று இருக்கிறது. எண்ணிக்கையில் மாற்றம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அதற்க்கு அவர்களிடம் லைலத்துல் கதர் எப்பொழுது என்று கேட்டால் ரமலானில் கடைசி பத்து நாள் என்கிறார்கள். அப்படி சொல்பவர்களிடம் கீழே உள்ள ஹதிஸை காண்பிக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) 'லைலத்துல்
 கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்த) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்' என்று கூறினார்கள்" என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

இதில் ஏழு, ஒன்பது, ஐந்து என்று மட்டுமே உள்ளது. அப்படி என்றால் லைலத்துல் கதிர் இரவை கடைசி ஏழு, ஐந்து, ஒன்பதாம் இரவில் தேடினால் போதுமா? கடைசி ஒன்று, மூன்றில் தேட வேண்டாமா?
இதில் எண்ணிக்கையில் மாற்றம் உள்ளதே. அதனால் லைலத்துல் கதிர் ஹதிஸை நிராகரிப்பார்களா என்று கேட்டால் சம்மந்தமே இல்லாமல் ஒரு பதில் வரும்.

சில என்றாலே அது ஒன்றுக்கு மேற்ப்பட்டு என்று ஆகிவிடும். வார்த்தைகளில் மாறுதல் இருந்தால் அதை நிராகரிக்க வேண்டும் என்று எண்ணினால் பெரும்பாலான ஹதிஸ்களை நிராகரிக்க வேண்டி இருக்கும்.

ரொம்பவே சுருக்கமாக எழுதி இருக்கிறேன். சகோதரர்கள் படித்து மற்றவர்களுக்கு இதை எடுத்து கூறவும்.

கேட்ப்பதை எல்லாம் கண்மூடி பின்பற்றாமல் ஒரு விசயத்தை சரியா? தவறா? என்று விளங்கி அதன் படி நடங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
ஜஸாகல்லாஹ்.

No comments:

Post a Comment