Pages

Monday, November 3, 2014

மீடியா


அஸ்ஸலாமு அலைக்கும்..
 
மீடியா என்ற தலைப்பில் எழுத தொடங்குகிறேன்.
 
 
ஆரம்பத்தில் இஸ்லாத்துக்கு சாதகமாக செய்தி சொல்வார்கள். பிறகு எதிரியாக காட்டிக்கொள்ளாமல், துரோகியாக தாங்கள் அடைந்த வெற்றியில் திளைப்பார்கள்.


 
புதிதாக தொடங்கும் சேனல் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் படும் துயரங்களை எல்லாம் காட்டுவதை போன்று தங்கள் சேனலில் செய்திகளை போடுவார்கள். அதே சமயம் ஹிந்துக்கள் படும் துயரம் என்று எந்த செய்தியையும் கூறாமல் மேலோட்டமாக நாட்டில் இருக்கும் மக்களை போன்று சித்தரித்து செய்தி வெளியிடுவார்கள்.
 
இங்கு தான் அவர்கள் அடையும் வெற்றி இருக்கிறது. முஸ்லிம்களை பற்றி ஒரு நல்ல செய்தி வெளி வந்ததும் உடனே நம்மவர்கள் அந்த சேனலுக்கு விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.. எப்படி?
ஹிந்து சகோதரர்கள் எவரும் ஹிந்துக்களை படும் துயரத்தை பற்றி செய்தி வந்து இருக்கிறது என்று எவரும் பரப்புவதில்லை.
 
ஆனால்  நம்மவர்கள் அந்த சேனலில் வந்த செய்தியை முகநூளில் போட்டு, முஸ்லிம்களை பற்றி பெருமையாக கூறும் ஒரு சேனல் என்று ஆரம்பித்து, அந்த சேனலை பார்க்க மற்றவர்களுக்கும் அறிவுறுத்தும் அளவுக்கு செல்கிறோம்.
 
அவர்களுக்கு தெரியும்... முகநூளில் இருக்கும் முஸ்லிம்கள் அப்பாவிகள். எதை சொன்னாலும் ஏற்று நம் பின்னால் வந்து விளக்கூடியவர்கள். அது மட்டுமின்றி தலித்களை விட கீழ் நிலையில் இருக்கும் இவர்களை பற்றி செய்தி வெளியிட்டால் அதனால் சந்தோசப்பட்டு இலவசமாக நமது சேனலுக்கு விளம்பரம் தேடி குடுத்து விடுவார்கள்... என்று.
 
அவ்வாறு நினைத்ததை போன்றே செய்தும் விடுகிறோம். அவர்கள் வெற்றியும் அடைந்து விடுகிறார்கள்.
என்னுடைய ஆசிரியர் ஒருவர் எனக்கு கூறியது... இன்றும் எனது நினைவில் இருப்பது.. ஒரு நபர் 3 TV சேனலுக்கு சமம், 5 பத்திரிக்கைகளுக்கு சமம், 10 வலை தளங்களுக்கு சமம், 100 போஸ்டருக்கு சமம். ஆகவே நீ வியாபாரம் செய்தால் முதலில் மக்களை கவர முயற்சி செய்.
 
இது தான் நடந்தது. நடக்கிறது.. நடக்கவும் போகிறது என்று நினைக்கிறேன்.
 
கடைசியில், அந்த சேனலோ தன்னுடைய துரோக புத்தியை காட்டி விடும்போது இலவசமாக விளம்பரங்களை செய்த நாம் எவ்வளவு தான் கத்தி கூப்பாடு போட்டாலும் அந்த சேனலில் இருந்து ஒரு செங்கலை கூட பெயர்த்து எடுக்க முடிவதில்லை.
 
காரணம், அவர்கள் உயரே செல்ல நாம் நமது முதுகு தண்டை வளைத்து கொடுத்து விட்டோம். மீண்டும் நிமிர முடியாத அளவுக்கு கூன் விழுந்து விட்டது..
 
கூன் விழுந்தால் விழுந்தது தான். இனி நிமிர முடியாது. ஆனால் நம்முடைய சந்ததியர்கள் இன்னும் கூன் விழாமல் இருக்கிறார்கள். அவர்களின் முதுகு தண்டு படைத்தவனை வணங்குவதற்கு மட்டுமே வளைய வேண்டும் என்று சொல்லி வளர்த்தால் நிச்சயம் மாற்றம் நிகழும்.
 
பல வருடமாக இஸ்லாமியர்களுக்காக ஒரு மீடியா இல்லை என்ற செய்தியை கேட்டு கேட்டு நான் செவிடனாகவே ஆகி விட்டேன்.
 
ஆகவே நம்முடைய முயற்சி நமது பிள்ளைகளின் கவனத்தில் கொண்டு வந்து அவர்களின் மூலமாக இந்த இஸ்லாமிய சமூதாயம் வளமிக்க, பலமிக்க  ஒரு சமூதாயமாக மாற இன்ஷாஅல்லாஹ் முயற்ச்சிப்போம்..
 
படைத்தவன் நாடினால், நமது முயற்ச்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
~ ஜஸாகல்லாஹ்.

No comments:

Post a Comment