Pages

Thursday, August 7, 2014

சூனியம் இருக்கிறதா? இல்லையா?

அஸ்ஸலாமு அலைக்கும்.

சூனியம் என்ற விஷயம் இன்று பரவலாக பேசப்படுகிறது. அதை பற்றி சில விசயங்களை எழுதலாம் என்று எண்ணுகிறேன்.



சூனியம் இருக்கிறதா? இல்லையா?

படைத்த ரப்புல் ஆலமீன் தனது திருமறையில் 2:102 வது வசனத்தில் "அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?"

இதில் சூனியத்தை சைத்தான்கள் ஊதியது என்று அல்லாஹ் கூறுகிறான்,. இதன் மூலம் சூனியம் என்ற ஒன்று இருப்பதை அல்லாஹ் தெளிவாக குறிப்பிடுகிறான். மேலும் அவர்கள் தான் சூனியத்தை மனிதர்களுக்கு கற்று தந்தார்கள் என்றும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். சூனியம் என்பது கற்று தரும் ஒரு கலை என்பதும் அது உண்டு என்பதுமே அல்லாஹ்வின் வார்த்தை.

அதே சமயம் இந்த சூனியம் என்பதை கற்கவும், கற்ப்பிக்கவும் நமக்கு தடை.

சூனியம் என்பது என்ன?

சூனியம் என்றால் பொய் கூறுவது மட்டுமா? அதை தவிர்த்து வேறு எதுவும் இல்லையா?

உண்டு. சூனியம் என்பது ஒரு கலை. அதன் மூலம் மக்களின் மனதை, கண்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இன்றைய காலக்கட்டங்களில் பல மேஜிக் காரர்களை பார்க்கிறோம். அவர்களின் தந்திர வேலைகள் ரொம்பவே ஆச்சரியப் படுத்த செய்யும். அதன் மூலம் அவர்கள் மக்களை தங்கள் வசம் கொண்டு வருகிறார்கள். இதுவும் ஒரு சூனியம் போன்றதே.

சூராஹ் தாஹா 20வது வசனம் 66வது வசனத்தில் மூஸா நபிக்கும் சூநியக்காரர்களுக்கும் நடக்கும் போட்டி பற்றி அல்லாஹ் விவரிப்பான். அதில் அல்லாஹ் கூறுகிறான். அவர்களின் சூனியத்தால் கயிறுகளும், தடிகளும் நிச்சயம் பாம்புகளாக நெளிந்தோடுவது போல் அவருக்கு தோன்றியது.

20:67 அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.

சூனியக்காரர்களின் சூனியத்தால் ஒரு நபிக்கே மனதில் அச்சத்தை ஏற்ப்படுத்த முடிந்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறெனில் சூனியம் மேஜிக் என்பது ஒன்றா என்ற கேள்வி எழலாம். இதை பற்றி விவாதிக்காமல் அதை அல்லாஹ்விடம் விட்டு விடுங்கள். அதனை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

சூனியத்தால் பாதிப்பை உண்டாக்க முடியுமா?

இதில் பாதிப்பு என்பது எந்த அளவில் என்று நம்மால் கூற இயலாது. காரணம் எவ்வகையான பாதிப்பு ஏற்ப்படும் என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு சொல்லித் தரவில்லை. இருப்பினும் கீழே உள்ள ஹதிஸை படியுங்கள்.
“தினமும் யார் ஒவ்வொரு நாள் காலையிலும் அஜ்வா வகை சேர்ந்த ஏழு பேரீத்தம் பழங்களை சாப்பிடுகின்றாரோ, அந்த நாளில் அவருக்கு நஞ்சோ, சூனியமோ பாதிப்பை ஏற்படுத்தாது.” ஆறிவிப்பவர் : ஆமிரிப்னு ஸஃத் (ரழி) ஆதாரம்: புஹாரி5445
விஷம் என்பதற்கு பாதிப்பு உண்டு என்பதை நாம் அறிவோம், அதே போன்றே சூனியம் என்பதற்கு பதிப்பு உண்டு என்பதை நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாதிப்பின் அளவுக்கோல் நமக்கு சொல்லித் தரப்படவில்லை.

சூனியம் என்பது பொய்யா?

நாம் வழக்கத்தில் சில சமயங்களில் உபயோகப்படுத்தும் பொய்க்கும், சூனியம் என்ற பொய்க்கும் வித்தியாசம் உள்ளது. அல்லாஹ் சூனியம் என்பதற்கு சிஹ்ர் என்ற வார்த்தையை பயன் படுத்துகிறான். பொய்க்கு சிஹ்ர் என்ற வார்த்தையை பயன் படுத்தவில்லை. அதற்க்கு பாதில் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருப்பான். பார்க்க(2:42).

ஆகவே சூனியம் என்பது வழக்கத்தில் பேசப்படும் பொய் அல்ல. அல்லாஹ் கூறும் சத்தியதர்க்கு மாற்றமானது என்பதன் எதிர்ப்பதம் பொய் ஆகும்.

இதை பற்றி இன்னும் ஏதேனும் தகவல் இருப்பின் இன்ஷாஅல்லாஹ் பதிக்கிறேன்.

ஜசாகல்லாஹ்.

No comments:

Post a Comment