Pages

Sunday, February 1, 2015

அனைத்தையும் அறிந்தவன்.


அன்பானவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று இருக்கும் போது, நாம் மனதில் நினைக்கும் நன்மை, தீமைகளை மலக்குமார்கள் எவ்வாறு கண்டுபிடித்து எழுதுகிறார்கள் என்ற ஒரு கேள்வி வந்தது. இது அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருப்பதாக நினைத்து, எவேரேனும் நல்லடியார்களுக்கும் இது போல சக்தி இருப்பதாக நினைக்க வைத்து விடுகிறது என்பதை கேள்வியின் மூலம் உணர முடிகிறது.


இம்மையில் மனிதன் செய்த நன்மை தீமையை; கியாமத் நாளில் மனிதனுக்கு தெரியப்படுத்த மலக்குமார்களை கொண்டு அல்லாஹ் எழுதி வைக்கிறான். ஏன்னா நாமதான் எதுக்கு எடுத்தாலும் ஆதாரம், ஆதாரம்ன்னு அலைரோமே..

அதனாலே, மனிதன் நன்மையை நினைத்தால் ஒரு நன்மை என்றும்; தீமையை நினைத்தால் எதுவும் எழுதாமல், தீமை செய்யும்போது மட்டும் எழுத அல்லாஹ் ஒவ்வொரு மனிதரின் வலது, இடது புறங்களில் ஒவ்வொரு மலக்குகளை நியமித்து இருக்கிறான்.

நன்மையை எழுத ரகீபுன் அதீத் என்ற மலக்குகள் இருப்பார்கள். இது பெயர் கிடையாது. இது அவர்களின் பண்புகள் ஆகும். ஒவ்வொரு மனிதரின் தோள்களிலும் ரகீபுன் அதீத் என்ற மலக்குகள் இருக்கிறார்கள். இவர்களை அல்லாஹ் கிராமன் காதிபீன் என்று அழைக்கிறான்.

அவர்கள் நமது உள்ளங்களில் நினைப்பதை அறிந்துக்கொண்டு எழுதுவதில்லை. மாறாக, அவர்களுக்கு கட்டளை இடப்படுகிறது. மலக்குமார்கள் எதையும் சுயமாக செய்பவர்கள் இல்லை. அவர் அவர்களுக்கு அல்லாஹ் இந்த இந்த பணி என்று நியமித்து விட்டான். அதை தவிர அவர்கள் வேறு எதுவும் செய்ய மாட்டார்கள்.

நன்மையை எழுதும் மலக்குகளால் தீமை செய்வதை எழுத முடியாது. தீமை எழுதும் மலக்குகளால் நன்மையை நினைக்கும்போது எழுத முடியாது.

அவர்கள் கண்காணிப்பாளர்கள்;. அவர்கள் கண்காணிக்கிறார்கள். குர்ஆனில் 50வது அத்தியாயம் 17-18 வசனம் படித்தால் உங்களுக்கே புரியும்.

மனிதனின் இருபுறமும் கண்காணிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனிதன் உள்ளத்தில் நினைப்பதை தானாக அறிந்து எழுதுவதில்லை. அவர்களுக்கு கட்டளை வந்து எழுதுகிறார்கள். அவர்கள் மனிதனின் உள்ளத்தை அறிந்தவர்களாக இல்லை. உயிரை எடுக்கும் மலக்குமார்கள் அவர்களுக்கு கட்டளை வரும்வரை காத்துக் கொண்டு இருப்பார்கள். கட்டளை வந்து விட்டால் ஒரு நொடி கூட தாமதிக்க மாட்டார்கள். அது போலவே அனைத்து மலக்குமார்களும் அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய கட்டளைக்காக காத்து இருப்பார்கள். கட்டளை வந்து விட்டால் தாமதிக்காமல் செய்து விடுவார்கள்.

அவ்வாறே, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் நன்மையை கட்டளையை கொண்டே எழுதுகிறார்களே தவிர, மனிதனின் உள்ளத்தை அறிந்து எழுதுவதில்லை.

மேலும், அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

No comments:

Post a Comment