Pages

Friday, November 2, 2012

ஆயுதம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே.. இன்றைய தலைப்பில் நாவை பேணுவதின் அவசியத்தை பற்றி பாப்போம்.


நமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட்கொடையாகும். அவனால் கொடுக்கப்பட்ட இந்த அருட்கொடைகளை அவனுக்கு விருப்பமான செயலுக்கே பயன்படுத்த வேண்டுமே தவிர அவன் எதைவிட்டும் தடுத்து இருக்கிறானோ அந்த வழியில் பயன்படுத்த கூடாது.

ஒரு மனிதன் தனது நாவைக்கொண்டே அவனது வாழ்க்கையை அமைத்து கொள்கிறான். அவனது வாழ்க்கை பிரச்சினையான வாழ்க்கையாக இருக்க வேண்டுமா? அல்லது அமைதியான அழகான வாழ்க்கையாக இருக்க வேண்டுமா என்பதை அவனது நாவைக்கொண்டே முதலில் தீர்மானித்து கொள்ள வேண்டியதாகிறது.

மனிதன் தனது நாவை குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், இஸ்லாத்தை எடுத்து சொல்லுதல் போன்ற நல்ல பணிகளுக்கு பயன்படுத்துவதை விட; பொய், புறம், ஏமாற்றுதல், பிறர் மனதை புண்படுத்தும்படி பேசுதல் போன்ற தவறான செயல்களுக்கே பயன்படுத்துகிறான்.

உண்மையான முஸ்லிம்கள் தங்களது நாவை காக்கும் விசயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இன்று குடும்பங்கள் சிதைந்து, ஊர் ஒற்றுமையை குழப்பி மனித சமூகத்திற்கும் நிம்மதிக்கும் உலைவைக்கும் அனைத்து பிரச்சினைக்கும் மூலக்காரணம் நாக்கு.

இதனால் சகோதர உறவுகள் அறுந்து போகின்றன. குடும்பங்கள் உடைந்து போகின்றன. இரத்தம் சிந்தப்படுகிறது. இதற்கெல்லாம் கணக்கே கெடையாது.

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் அல்லாஹ்வையும் மறுமையையும் உண்மையாக நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லது பேசட்டும் இல்லையேல் மெளனமாக இருக்கட்டும். (அறிவிப்பவர் அபூ ஹுரைராஹ் (ரலி) - இப்னுமாஜா 3971).

ஒருவரை நாம் கிண்டலும் கேலியும் செய்யும்போது அதனால் அவர் மனது புண்படுகிறதா என்று யோசிக்கவேண்டும். சில நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் கிண்டலையும், கேலியையும் சர்வ சாதரணமாக எடுத்து கொள்வார்கள். ஆனால் சிலருக்கு, சொல்லப்படும் வார்த்தைகள் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

ஒருவர் தான் சிறந்தவராக இருக்கவேண்டும் என்று என்னுவாறேயானால், மற்ற மனிதர்களுக்கு தொந்தரவு தராமல் வாழவேண்டும். கீழே உள்ள ஹதிஸை படிப்போமேயானால் நமக்கு இன்னும் சற்று தெளிவாக விளங்கும்.

அபூ மூஸா அழ அஷ்அரி (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்து "அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவையும், கரத்தையும் விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றனரோ அவரே சிறந்த முஸ்லிம்" என்று பதிலளித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்).

மக்கள், மனிதனது பேச்சை வைத்தே அவனை அளக்கின்றனர். அவனது பேச்சு இனிமையானதாகவும், மனதிற்கு இதம் அளிப்பதாகவும் இருக்குமேயானால், அதை வைத்தே மக்களால் நாம் மதிக்கப்படுகிறோம்.

ஒரு மனிதன் நோயாளியை சந்திக்கப்போனால், அவனுக்கு ஆருதல் அளிக்கும் சொல்லையே பயன்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு; "இப்டிதான் எங்க சொந்தகாரர் ஒருத்தருக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. இரும்பியே செத்து போயிட்டாரு" என்று கூறினால் அந்த நோயாளி என்ன நினைப்பார். இவர் நம்மை நலம் விசாரிக்க வந்தாரா? அல்லது கபுருக்கு அளவெடுக்க வந்தாரா? என்றல்லவா நினைப்பார்.

மனிதன் எந்த இடத்தில் எப்படிப்பட்ட சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து வைத்து கொள்ள வேண்டும். மனிதர்களிடத்தில் அழகனா சொல்லையும், நோயாளிகளிடத்தில் இதமான சொல்லையும், குடும்பதரிடத்தில் அன்பான சொல்லையும், போர்களத்தில் வீரமிக்க சொல்லையும் பயன்படுத்த வேண்டும்.

குழப்பமான சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சொல்லி தந்து இருகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குழப்பமான சந்தர்ப்பங்கள் பற்றி உரையாற்றிக் கொண்டு இருந்தார்கள். அப்போது உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அதிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டார்கள். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், "நாவைக் காப்பாயாக. உன் வீடே உனக்கு விசாலமானதாக இருக்கட்டும். உன் தவறுக்காக நீ அழுவாயாக". என்று பதிலளித்தார்கள். (திர்மிதி 2408).

ஆரம்பத்தில் நானும் சிலரை மறைமுகமாக விமர்சித்தே எழுத செய்தேன். இனி அவ்வாறு செய்ய கூடாது என்று எனக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான். அது;
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்-குர்ஆன் 104:1)

இன்ஷாஅல்லாஹ் தொடருவோம்... 


No comments:

Post a Comment