Pages

Friday, November 2, 2012

ஆயுதம்: தொடர்ச்சி 2



அஸ்ஸலாமு அலைக்கும்...

அன்பான சகோதரர்களே!.. ஆயுதம் என்ற தலைப்பில் நாவை பேணுவதைப் பற்றி இஸ்லாம் சொல்லக்கூடிய செய்திகளை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில விசயங்களை பற்றி பார்போம், இன்ஷாஅல்லாஹ்.

நாவைப் பேன வேண்டும் எனபது சாதாரண மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதன்று. இஸ்லாத்தை பற்றி நன்கு தெரிந்த, ஏகத்துவ கொள்கையில் சிறந்து விளங்குகின்ற அறிஞர்களுக்கும்தான். இறை வழிப்பாட்டில் அதிக ஆர்வம் காட்டுவோரும் கூட நாவு விசயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளத் தவறி விட வாய்ப்பு உள்ளது என்பதை கீழே உள்ள நபிமொழி நமக்கு உணர்த்தும்.

நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இஸ்லாத்தில் ஒரு செய்தியை கூறுங்கள். அதன் பின் இஸ்லாம் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டுமாயின், உங்களைத் தவிர வேறு எவரிடத்திலும் கேட்கத் தேவையில்லை எனும் அளவுக்கு அது எனக்குப் போதுமானதாகவும் இருக்க வேண்டும்" எனக் கேட்டேன். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்தான் என் ரப்பு எனக்கூறி, பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்பாயாக!" எனக் கூறினார்கள். பின்னும் நான், "எந்த விசயத்தில் என் மீது அதிகம் நீங்கள் அஞ்சுகிறீர்கள்?" எனக் கேட்டேன். அதற்க்கு அவர்கள், தனது நாவைப் பிடித்துக் காட்டி "இதுதான்" என்றார்கள் என சுபியான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (திர்மிதி 2412)

இங்கே ஒரு சஹாபி ஏகத்துவத்தில் நிலைத்து நிற்பதாக கூறிய பின்னரும், "உன்னிடத்தில் நாவின் விபரீதங்கலையே நான் அதிகம் அஞ்சுகிறேன்" என நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை அனைவரும் கவனத்துடன் நோக்க வேண்டும்.

கெட்டவர்கள் மட்டும் அழிவை சந்திப்பவர்கள் அல்ல. ஓரிறை கொள்கையில் விடாப்பிடியாக இருபவர்களும், கொடை வள்ளல்களும், இறை வழிப்பாட்டில் இன்பம்காணும் மனிதர்களும் கூட, தங்களது நாவால் மறுமையில் அழிவை சந்திப்பர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்ட விசயத்தை மணிக்கணக்கில் பேசினால் தான் நாவால் அழிவு என்பதில்லை. ஒரே ஒரு வார்த்தை கூட நமக்கு சொர்கத்தை ஹராம் ஆக்கி விட போதுமானது.

"முன்னொரு காலத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் வணக்கசாலி, மற்றவர் போடுப்போக்கானவர். இந்த வணக்கசாலி எப்பவும் மற்றவருக்கு உபதேசம் செய்து வந்தார். ஒரு நாள் அந்த மனிதர் இவரைப் பார்த்து, "என்னைக் கண்காணிப்பவனாக அல்லாஹ் உன்னை அனுப்பவில்லை. நீ உன் வேலையை பார்" என்றார். அதைக் கேட்ட அந்த இபாதத்தாளி, "நிச்சயமாக! அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்" என்று கூறிவிட்டார். நாளை மறுமையில் அந்த இருவரும் நிறுத்தப்படும் போது, அல்லாஹ் அந்த போடுப்போக்கானவரை மன்னித்து, இபாதத்தாளியைப் பார்த்து, "நான் மன்னிக்க மாட்டேன் என்று கூற உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உன் அமல்களை நான் அழித்து விட்டேன்" என்று கூறி நரகுக்கு அனுப்புவான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ஜுன்தூப் (ரலி) - முஸ்லிம்).

சொல்லக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மனிதன் சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் கூட, அவனது மறுமையின் வாழ்வின் ஈடேற்றதிக்கு அல்லது அழிவுக்குக் காரணமாகிவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ் தொடருவோம்...

No comments:

Post a Comment