Pages

Tuesday, December 29, 2015

என்ன தலைப்பு சொல்லலாம் - 3


அஸ்ஸலாமு அலைக்கும்

வீட்டில் இருக்கும் ஒரு மாணவனுக்கு அன்பு மற்றும் பாசத்துடன் சேர்த்து உணவு மட்டுமே கிடைக்கும். வாழ்க்கையின் அனுபவம் என்பது அவனுக்கு வெளியில் இருந்தே கிடைக்கிறது. அந்த அனுபவம் தான் அவனுக்கு பாடமாகிறது. அதுவே அவன் வாழ்க்கை ஆகிறது.

 
பிள்ளையை பள்ளியில் சேர்த்தோம் என்று பெற்றோர்களும் இருந்து விடக்கூடாது. பள்ளியில் என்ன என்ன நடந்தது என்று தினமும் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். சில ஆசிரியர்கள் அவர்களின் சொந்தக் கோபத்தை கூட பிள்ளைகளிடம் காட்டி விடுவார்கள். அதை எல்லாம் கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது.


 வீட்டுப்பாடம் என்பதற்கு நான் எதிரி ஆவேன். படிப்பு என்பது பள்ளியோடு இருக்க வேண்டும். குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பள்ளி முடிந்து விட்டால் விளையாட்டு ஆகிய பொழுதுபோக்குகள் மட்டுமே மகிழ்ச்சி.
 
பல குழந்தைகள் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தினால் வீட்டு பாடம் செய்ய முடியாமல் போய் விடும். அதனால் அடுத்த நாள் அவர்கள் ஆசிரியர்களின் மீது கொண்ட பயத்தின் காரணமாக குற்றவாளிகள் போன்று பயந்து பயந்து பள்ளிக்கு செல்வார்கள். அந்த பயம் நாளடைவில் வேலைக்கு செல்லும்போது கூட இருக்கும். இப்படி மாணவர்களுக்கு பயத்தை காட்டி எந்த பிரயோஜனமும் கிடையாது.


 ஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவர்கள் என்று சொல்பவர்கள் தான் பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எப்போது வீட்டு பாடங்களை எல்லாம் தயார் செய்து விடுவார்கள். லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களிடம் ஒட்டி இருக்க மாட்டார்கள். அதனாலேயோ என்னவோ, மாணவர்கள் வீட்டு பாடம் செய்து வரவில்லை என்றால் கோவத்தின் உச்சிக்கு சென்று விடுகிறார்கள்.
 
இவன் படிப்பின் மீது ஆர்வம் உள்ளவன். இவனுக்கு விளையாட்டில் மட்டுமே ஆர்வம் இருக்கிறது என்று ஆர்வத்தை ஊட்டக்கூடிய ஆசிரியர்களே மாணவர்களை பிரித்து வைத்து அதையே அந்த மாணவன் கடைசி வரை பின்பற்றும்படி செய்து விடுகிறார்கள்.


 இரு ஆசிரியர் பேசிக்கொள்ளும்போது, இந்த மாணவன் அடங்கவே மாட்டேன்கிறான் சார் என்று ஒரு ஆசிரியர் கூறினால்; மற்றவர், அவனை எல்லாம் முட்டி போட வச்சி தோலை உரிங்க சார் என்று கசாப்பு கடைகாரர் ரேஞ்சுக்கு பேசுவார்கள். இது, ஆசிரியர்கள் வன்முறைக்கு வித்திடுகிறார்கள் என்று ஆகிறது.
 
மாணவர்களிடம் ஆசிரியர்கள் நடந்துக்கொள்ளும் விதமும், அணுகுமுறையும் கூட சில சமயங்களில் அவர்களின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment