Pages

Tuesday, December 29, 2015

என்ன தலைப்பு சொல்லலாம் - 2


அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வெளிப்படையான உரையாடல் இருக்க வேண்டும். அதற்காக அவரவரின் குடும்பம், சினிமா போன்ற விசயங்களில் இருக்க கூடாது. அவைகள் அனைத்தும் மாணவர்களுடைய எதிர்காலத்தின் நலனாக இருக்க வேண்டும்.

...
ஒரு மாணவனுக்கு வீடியோ கேம் விளையாடுவதில் விருப்பம். அவனுக்கு கம்ப்யூட்டர் கேம் எல்லாம் அத்துப்படி. படிப்பில் ஆர்வமின்மை. இப்படிப்பட்ட மாணவனை என்ன செய்யலாம்?
அந்த மாணவனுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மை என்பதை காட்டிலும் கேம் விளையாடும் அவனது செயலில் ஒரு வியாபாரம் ஒளிந்து இருப்பதை காணலாம்.

கேம் விளையாடுவதில் என்ன வியாபாரம் இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது.
ஒரு கேம் சென்டர் தொடங்குவது என்பது அவ்வளவு சுலப காரியம் இல்லை. பலதரப்பட்ட கேம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அந்த கேம் பற்றிய அறிவும் இருக்க வேண்டும்.

விளையாட வருபவர்களுக்கு அந்த கேமை எப்படி விளையாட வேண்டும் என்பதை சொல்லி தர வேண்டும். இப்படி புதிது புதிதாக கேமை அறிமுகப்படுத்தினால் பொழுதுபோக்குக்கு விளையாட வருபவர்களிடத்தில் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு தொகை என்று வசூல் செய்து சம்பாதிக்கலாம்.
இது அனைவருக்கு சாத்தியம் ஆகி விடாது. கேம் பற்றிய அறிவு கொண்ட ஒருவரால் தான் திறன்பட செயல்படுத்த முடியும்.

ஒரு உதாரணத்துக்கு மட்டுமே இதனை சொல்கிறேன். இதைப்போன்று ஒவ்வொரு மாணவர்களிடமும் ஏதாவது ஒரு செயல் அவர்களின் வளர்ச்சியின் அங்கமாக இருக்க முடியும். இதனை பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை நன்றாக படிக்க வேண்டும். படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே.

ஆனால் ஒரு ஆசிரியர் நினைத்தால், வேலைக்கு போகும் மாணவனையும் உருவாக்கலாம். வேலை கொடுக்கும் மாணவனையும் உருவாக்கலாம்.

No comments:

Post a Comment