Pages

Monday, February 9, 2015

முகநூல் பதிவுகள்


சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
சில தினங்களாக நட்பு வட்டத்தில் ஆபாச பதிவு வருவதாக பலரின் பதிவை பார்த்தேன். அதை சிலர் ஹேக்கிங் என்கிறார்கள். ஹேக்கிங் என்பது வேறு. இவ்வாறு ஆபாச பதிவு என்பது வேறு.
ஆபாச பதிவானது நாம் அறிந்துக்கொண்டே சில வெப்சைட்களுக்கு சென்று அந்த பதிவை ஷேர் செய்வது போன்ற செயலால் வரலாம். அடுத்து, சில வெப்சைட்களுக்கு சென்று அங்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கும் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது வரலாம். மற்றொன்று மொபைல் அப்ளிகேசனில் கேம் டவுன்லோட் செய்யும்போது அதை f...acebook இல் ஷேர் செய்தால் உங்களுக்கு 5 பாயிண்ட் என்ற ஆசை வார்த்தை காட்டும். அப்பொழுது எதையும் சரியாக படிக்காமல் ஷேர் செய்வதாலும் வரலாம்.
தற்செயலாக நடப்பதை விட தங்களுடைய செயலால் இவ்வாறு ஆபாச பதிவு வரத்தான் நிறைய வாய்ப்பு உள்ளது.
அவ்வாறெனில், தற்செயலாக நடக்க என்ன வாய்ப்பு உள்ளது? பெரும்பாலும் கணினியில் முகநூல் பயன்படுத்துவதை விட மொபைலில் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். அதாவது லாக்அவூட் செய்வதே கிடையாது. திறந்து கிடக்கும் வீட்டில் தான் திருடனால் சுலபமாக நுழைய முடியும் என்ற அடிப்படையை நாம் விளங்க வேண்டும். நான் பாஸ்வோர்ட் என்ற சாவி வைத்து இருந்தாலும் அதை பராமரிக்காமல் போனால் தற்செயலாக நடக்கும் செயல் நடந்தே தீரும். அதுவும் டச் ஸ்க்ரீன் மொபைலில் ஸ்க்ரோல் செய்துக்கொண்டு வரும்போது தேவையற்ற லிங்கில் விரல் பட்டுவிடுவதால் வரவும் வாய்ப்பு உள்ளது.
முகநூல் மூலம் கேம் விளையாடுவதை நிறுத்துங்கள். எந்த கேம் ரிகுவச்டையும் ஷேர் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு லிங்க் தேவையற்றதாக தெரிந்தால் கிளிக் செய்து விடாதீர்கள் (டச் ஸ்க்ரீன் மொபைலில் சுலபமாக கிளிக் ஆக வாய்ப்பு உள்ளது). பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருங்கள் (ஏற்கனவே நோவியன்ஸ்களுக்கு பாஸ்வோர்டை எப்படி வைக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்). அதையும் மீறி ஏதேனும் நண்பர்களிடம் ஆபாச பதிவு ஷேர் ஆனால் அவருக்கு இன்பாக்ஸில் தெரியப்படுத்தி விட்டு தற்காலிகமாக அன்பிரண்ட் செய்து விடுங்கள். நிலைமை சரி ஆனது பிரண்ட் ஆக்கிக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்.

No comments:

Post a Comment