Pages

Tuesday, February 26, 2013

முறையாக பேணுவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே! இந்த பதிவில் தொழுகையில் தவிர்த்துக் கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்களை பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ்...

அல்லாஹ் நமக்கு கொடுத்து இருக்க கூடிய மிகப்பெரும் பாக்கியம் தொழுகை என்றால் அது மிகை ஆகாது. அந்த தொழுகையின் மூலமாகவே அல்லாஹ் உதவியும் தேட சொல்கின்றான்.

அந்த தொழுகைதான் நமக்கும் காஃபீர்களுக்கும் உள்ள வித்தியாசமே. அந்த தொழுகைதான் நமது உள்ளதை தூய்மை படுத்துகிறது. அந்த தொழுகைதான் நமது ஈமானை இன்னும் வலுப்பெற செய்கிறது. அந்த தொழுகைதான் நமது மறுமையின் வாழ்வில் ஈடேற்றம் பெற உதவுவது.

அப்படிப்பட்ட தொழுகையை நாம் பேணுவதை போன்று அதை சரிவர செய்ய வேண்டும்.

முதலில், நிதானம் இல்லாமல் தொழக்கூடாது. சகோதர்களே தொழுகையில் யாரவது திருடுவார்களா? அப்படி திருட முடியுமா?. அவ்வாறு திருடுபவர்கள் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் கூறுவதை கேளுங்கள்.

"திருடர்களில் மிக மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அவன் தனது தொழுகையில் எப்படித் திருடுவான்?" என்று வினவினார்கள். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் "அவன் தொழுகையின் ருகூவையும், சுஜூதையும் முழுமையாகச் செய்ய மாட்டான்" என்று கூறினார்கள். (அஹ்மத்)

மேற்கண்ட இந்த ஹதீஸின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், தொழுகையில் நிதானத்தை கடை பிடிக்க வேண்டும் என்பதே. ஒரு ஹதீஸில் வருவதாவது: ஒருவர் பள்ளியில் வந்து தொழுகிறார். பறவைகள் தானியங்களை கொத்துவது போன்று ருகூவையும்ம் சஜ்தாவையும் செய்தார். அதை பார்த்த நபி (ஸல்) அவர்கள் "இந்த நிலையில் ஒருவர் மரணித்தால் முஹம்மதின் மார்க்கம் அல்லாததில் மரணிக்கிறார்" என்று கூறினார்கள். ஆகவே முதலில் நாம் தொழுகையில் நிதானத்தை கடைப்பிடிப்போம்.

இரண்டாவது, தொழுவிக்கும் இமாமை முந்துவது கூடாது. மனிதன் அவசரக்காரன் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். அப்படி அவசரக்காரனாக இருக்கும் மனிதன் தொழுகை விசயத்தில் இமாமை முந்தி விடக்கூடாது என்பதே அல்லாஹ்வின் தூதரின் கட்டளை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "இமாமுக்கு முன் தனது தலையை உயர்துகின்றவர், அவரது தலையை கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவான் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டாமா?" (புஹாரி).

பார்த்தீர்களா? நாம் காட்டும் சில நொடிகளின் அவசரத்தினால் நமது தலையை கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றி விடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும், அவசரம் சைத்தானின் புறத்திலிருந்தும் உள்ளதாகும். (பைஹகி).

ஆகவே தொழுகையில் நாம் நிதானத்தை கடைப்பிடிப்போம். மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வியே தொழுகையை குறித்துதான். அப்பேர்ப்பட்ட தொழுகையை முறையாக பேணியும், கடைப்பிடித்தும் மறுமையில் வெற்றி பெறுவோமாக.

No comments:

Post a Comment