Pages

Tuesday, January 1, 2013

கண்ணியதிர்க்குரியவள்


அஸ்ஸலாமு அலைக்கும்...

கண்ணியதிர்க்குரியவர்களே!... ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் மிகுந்த கண்ணியத்தை தந்துள்ளது. வேறு எந்த சமூகத்திலும் பார்க்க முடியாத ஓர் அந்தஸ்தை இஸ்லாம் தருகிறது என்றால் அது மிகை அல்ல.

ஆடை விசயத்திலும், பேசும் விதத்திலும், சேவை செய்வதிலும்... இவ்வாறு, பல செயல்களை எப்படி எல்லாம் அமைத்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கற்று தருகிறது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டி தந்த வழிப்படி ஒரு பெண் நடப்பாயானால் அவளே கண்ணியதிர்க்குரியவல். அவ்வாறு தனது வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்றால் அவள் கண்ணியம் குறைந்தவள் ஆகிறாள்.

இன்று நமது சமூதாயத்திற்கு மிகப் பெரும் தலைவலிகளில் ஒன்றாக இருப்பது... மார்க்கத்தை மறந்து, தான் யாருடைய உம்மத் என்பதையும் மறந்து, குடும்பத்தை புறம் தள்ளிவிட்டு... ஓடும் பெண்கள்.

இஸ்லாமிய பெண்களே!... சற்று சிந்தியுங்கள். தங்களுக்கு ஹிஜாப் எனப்படும் ஒரு கவசம் இருக்கும்வரை உங்களை ஒருவனும் சீண்டமாட்டான். எப்பொழுது அந்த கவசத்தை உதறி விடுகிறீர்களோ... YOU WILL BECOME PUBLIC PROPERTY.

ஹிஜாப் என்றால் நீங்கள் உபயோகப்படுத்தும் கருப்பு நிற புர்க்காவை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது உங்களை பாதுகாக்கும் திரை. உங்களுடைய செயல்களை அமைத்து கொள்ளும் விதமும் கூட.

ஒரு பொருளில் தூசி படிந்து விடக்கூடாது என்று எவ்வாறெல்லாம் பாதுகக்கின்றோமோ அவ்வாறு இஸ்லாமிய பெண்களை, இஸ்லாம் பாதுகக்கின்றது.

நீங்கள் கண்ணியமிக்கவர்களாக கருதப்பட அல்லாஹ் என்ன கூறுகிறான் தெரியுமா?

(நபியே!) உம்முடைய மனைவிகளுக்கும், உமது பெண் மக்களுக்கும் மூமின்களின் பெண்களுக்கும், அவர்கள் தலை முந்தானைகளை இறக்கிக் கொள் ளும்படியும் நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாமல் இருக்க இது எளிய வழியாகும். அல்லாஹ் மன்னிப்பவன் கருணையாளன் ஆவான். (33:59)

படித்தீர்களா?.. இதுவே எளிய வழி என்று கூறுகிறான். உங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்வது மிகவும் கஷ்டமா?. உங்கள் கணவன் முன்பு அவ்வாறு இருக்க சொல்லவில்லை. உங்கள் தாய், தந்தை முன்பு அவ்வாறு இருக்க சொல்லவில்லை. உங்கள் பிள்ளைகளிடத்தில், வயதானவர்களிடத்தில் அவ்வாறு இருக்க சொல்லவில்லை. அந்நிய ஆண்களிடம் அவ்வாறு இருக்க சொல்கிறது. கண்ணியமானவலாக கருத இதை விட எழிய வழி ஏதேனும் உண்டா?.

இவ்வாறான மார்க்கத்தை விட்டு விட்டு மாற்று மதத்தை காதலித்து, அதை சார்ந்தவனை நேசித்து... ஓடுகிறார்களே பெண்கள்... இது நியாயமா? இது சரியா?

நரகத்தில் பெண்களை அதிகம் கண்டேன். அதனால் பெண்களே நீங்கள் அதிகம் தர்மம் செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களே... அவ்வாறு பார்த்த பெண்களில் நீங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களா?

பெண்களை பல ஊடகங்களும் காட்சி பொருளாகவே சித்தரிக்கிறது. இதில் அமீபா அளவு கூட சந்தேகம் இல்லை. சில இஸ்லாமிய ஊடகங்கள் கூட பெண்களை முன்னிருத்தியே செய்திகளை கூறுகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது.

பெண்களை அவ்வாறு காட்சி பொருளாக காட்டும் காலக் கட்டமான இன்று, பெண்கள் தங்களின் வாழ்வை இஸ்லாம் கூறக் கூடிய வழியில் அமைத்து கொள்ள வேண்டும்.

கீழே உள்ள வசனத்தை ஒரு முறை படியுங்கள்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்''. (33:32)
நபியின் மனைவியர் எந்த அளவுக்கு கண்ணியமிக்கவர்களாக கருதப்பட்டார்கள் என்பதை வரலாற்றை படிப்பவர்கள் அறிவார்கள். அப்படிப் பட்ட நபியின் மனைவிகளுக்கே அல்லாஹ் இடுகின்ற கட்டளையை பார்த்தீர்களா?. 

சுலபமான இந்த செயல்களை பின் பற்றினாலே போதுமே. நீங்கள் கண்ணியமிக்கவர்களாக அறியப்பட. இதைவிட சுலபமான, சிறந்த வழியை உங்களால் கூற முடியுமா?. எவராலும் முடியாது. காரணாம், படைத்தவன் நமக்கு இலகுவானதையும், சுலபமானதையும் மட்டுமே நாடுகிறான்.

ஒவ்வொரு வேளை பாங்கின் அழைப்பிலும் கூறப்படும் அஷ்ஷஹது அன்ன முஹம்மதுர் ரசூலில்லாஹ் என்ற சொல்லை திரும்பவும் கூறும்போது, தனது இறுதி நிலையிலும் சமூகத்தை பற்றி கவலைக்கொண்ட அந்த மாபெரும் மனிதரை நினைவு கூறுங்கள். அவரே, அல்லாஹ்வின் தூதர், நபி முஹம்மது (ஸல்).

அப்பேற்பட்டவரின் உம்மத்திலிருந்து வந்த இஸ்லாமிய பெண்களே!... சிந்தியுங்கள். தயவு செய்து மாற்று மதத்தவரை காதலிக்கிறேன் என்ற சைத்தானின் வசனத்தை கூறிக் கொண்டு, நரகத்தை நோக்கி ஓடாதீர்கள்.

அப்படியே நீங்கள் ஓட வேண்டும் என்று விரும்பினால், உங்கள் இஸ்லாமிய கணவருடன் ஓடி புடிச்சி விளையாடுங்க.

கண்ணியதிர்க்குரியவள்: அவளே ஓர் மரத்தின் வேர்.

ஜசகல்லாஹ்.

No comments:

Post a Comment