Pages

Thursday, July 25, 2013

கொடுங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
இந்த புனித மிக்க ரமலான் மாதத்தை அடைய வைத்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்:
 
அன்பார்ந்த சகோதரர்களே, இந்த புனித மிக்க மாதத்தில் கடமையான ஜகாத் என்பதை ஏழைகளுக்கு குடுக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளோம். நமது செல்வத்திலிருந்து 2.5% ஏழைகளுக்கு தர வேண்டும். அதுவும் இது அனைவருக்கும் பொருந்தி விடாது. யாரிடத்தில் 84 கிராம் அளவுக்கு தங்கம் அல்லது அதற்க்கு மேற்ப்பட்டு செல்வம் இருக்கிறதோ அவர்களின் மேல் ஜகாத் என்பது கடமை ஆகி விடுகிறது.
 
ஜகாத் என்ற அரபி சொல்லுக்கு தூய்மை என்று பொருள். நம்முடைய கடமையான ஜகாத்தை ஏழைகளுக்கு தந்துவிடும்போது உள்ளம் தூய்மை அடைந்து விடுகிறது. தர்மத்தின் மூலம் மனிதனின் உள்ளங்கள் தூய்மை அடைகிறது என்பதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை படியுங்கள்:
 
9:103 (நபியே) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான்.
 
மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் உள்ளும் புறமும் தர்மத்தின் மூலம் தூய்மை ஆக்குகிறான். குரானில் அல்லாஹ் சுபஹானஹு தால எந்த இடத்தில் தர்மத்தின் மூலம் பொருள் தூய்மை அடைவதாக கூறவில்லை. ஒருவேளை நான் அறியாமல் இருந்தால் சகோதரர்கள் சுட்டிக்காட்டவும். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
 
ஜகாத் குடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் அவசியமில்லையா என்று பார்ப்போமேயானால் அதற்கும் குரான் மற்றும் ஹதீஸில் எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அல்லாஹ் மிக்க அறிந்தவன். ஆரம்பக்காலம் தொட்டு ஜகாத் என்றால் தன்னுடைய சொத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் 2.5% தான் மக்கள் குடுத்து வந்துள்ளார்கள். ஒரு வாதத்திற்கு வருடா வருடம் குடுத்த பொருளுக்கே ஜகாத் குடுத்து வந்தால் கடைசியில் குடுப்பவன் வாங்க கூடிய நிலைக்கு அல்லவா சென்று விடுவான் என்று கேட்கலாம். நாம் நினைப்பதை விட அல்லாஹ் நினைப்பது மற்றும் நாடியது தான் நடக்கும் என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
 
ஜகாத் தந்ததால் தான் ஏழை ஆகி விட்டேன் என்று இதுவரை ஒருவர் கூட கூறியதில்லை. அல்ஹம்துலில்லாஹ். காரணம் அல்லாஹ் கூறுகிறான் "மனிதர்களுடைய முதல்களுடன் சேர்த்து உங்கள் செல்வம் பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால் அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, அவ்வாறு கொடுப்போர் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கி கொண்டவர்களாவார்கள். 30:39
 
அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான் ஜகாத் மூலமாக அல்லாஹ் இரட்டிப்பாக்கி தருகிறான் என்று. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது. சைத்தான் நமக்கு வறுமையை கொண்டு பயமுறுத்துவான் என்று அல்லாஹ் கூறுகிறான். அவ்வாறு ஒருத்தர் வறுமையில் இருந்தால் அவர் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் அவர் மீது ஜகாத் கடமை இல்லாமல் இருக்கும். அதற்காக அவர் மறுமையில் கேள்விக் கேட்கப்பட மாட்டார்.
 
92:17-18 வது வசனத்தில் தர்மத்தின் மூலம் நரக நெருப்பில் இருந்து காத்துக்கொள்ளவும், மனிதன் தூய்மை அடையவும் முடியும் என்று  அல்லாஹ் கூறுகிறான்.
 
ஆகவே, நம்முடைய ஜகாத்தை ஏழைகளுக்கு தந்து அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்வோமாக..
 
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்...

No comments:

Post a Comment