Pages

Friday, March 23, 2012

பகிரங்க அழைப்பு:

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பான சகோதரர்களே!, படைத்தவனை விட்டுவிட்டு படைப்புகளை வணங்கும் எனது நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் இந்த அழைப்பு. படைப்பாளன் என்று ஒருவன் இல்லாமல் படைப்பு என்பது இல்லை என்பதை இறை மறுப்பாளர்கள் கூட நம்புகின்றனர். இதன் மூலம், இந்த உலகமும் அதில் இருப்பதும் படைப்பு; அதை படைத்தவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலகை படைத்து அதில் நம்மை வாழ வைத்த இறைவனுக்கு அதிகம் அதிகம் நன்றி செலுத்த கடமை பட்டுள்ளோம். படைப்பாளன் எதிர் பார்ப்பதும் அதைத்தான். 

மனிதர்களுக்கு வேதத்தை கொடுத்த படைப்பாளன் அந்த வேதத்தில் கூறுவதை கேளுங்கள்:

(அல்குரான் 51:56) மனிதர்களையும், ஜின்களையும் என்னை வணங்குவதற்காக தவிர வேறு எதற்காகவும் படைக்கவில்லை.
(ஜின்கள் என்றால் என்ன என்று தெரியாத நண்பர்களுக்கு, அதை பற்றி ஒரு தனி பதிவு போடப்படும், இறைவன் நாடினால்...)

கடவுள் என்று ஒருவன் இருக்கிறான் என்றும் வேதம் ஒன்று உள்ளது என்று நம்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கட்டுரையை படிக்கவும். இந்த உலகத்தில் மனிதனை படைத்த இறைவன் வாழ்கையை எவ்வாறு அமைத்து கொள்ள வேண்டும் என்று கட்டளை இடுகிறான். அதில் ஒன்றுதான் தன்னை தவிர வேறு எதையும் கடவுளாக ஏற்று கொள்ள கூடாது, வேறு எதையும் வணங்க கூடாது. ஆனால் மக்களில் பெரும்பாலோர் இந்த கட்டளையை புறக்கணித்தே வாழ்கிறார்கள்.

ஆதிகாலத்தில் மனிதன் எதை கண்டு பயன்தானோ அதை எல்லாம் கடவுளாகவே வணங்க ஆரம்பித்தான். பிறகு அந்த பயத்தை போக்க எது கெடைததோ அதையும் கடவுளாக வணங்க ஆரம்பித்தான். சுட்டரிக்கும் சூரியனை கண்டு பயந்த மனிதன் அதை கடவுளாக்கினான். இரவை கண்டு பயந்த மனிதன், வெளிச்சத்தை தந்த நிலவை கடவுளாக்கினான். இவ்வாறே, மலையையும், கடலையும், மிருகங்களையும், மனிதர்களையும் கடவுள் ஆக்கினான்.

ஆனால் பாருங்கள்: கடலை கடவுளாக வணங்குகிறான், ஆனால் அங்கே போய் கடல் கடவுளை மிதிக்கிறான். சூரியனை கடவுளாக வணங்குகிறான், கோடைகாலத்தில் அந்த சூரிய கடவுளை திட்டுகிறான், பாம்பை கடவுளாக வணங்குகிறான், தனக்கு அதனால் பாதிப்பு என்றால் பாம்பு கடவுளை கொள்கிறான். மனிதனை கடவுளாக வணங்குகிறான், தனக்கு எதிரி என்று ஒருவனை ஏற்படுத்தி கொள்கிறான். இவ்வாறு இருக்கும் ஒரு படைப்பு கடவுளாக இருக்க முடியுமா? என்று சிந்தியுங்க நண்பர்களே.

குரானில் படைப்பாளன் கூறுவதை கேளுங்கள்: (அல் குரான் 112:1-4)
வணக்கத்திற்குரியவன் ஒருவனே.
அவன் எந்த தேவையும் இல்லாதவன்.
அவன் யாரையும் பெறவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை.
அவனுக்கு நிகராக எவருமில்லை.

மனிதர்களை கடவுளாக வணங்கும் நண்பர்கள் மேலே உள்ள இந்த நான்கு தன்மை அந்த மனித கடவுளுக்கு ஒத்து போகிறதா என்று பாருங்கள். நீங்கள் என்னதான் ரூம் போட்டு யோசிச்சாலும் இந்த 4 தன்மைகள் எவருக்கும், எதற்கும் ஒத்து போவாது. சிந்திக்க கூடிய, கல்வி அறிவு கொடுக்கப்பட்டவர்கள் கூறுவதையே நானும் கூறுகிறேன். ஒரு பேருந்துக்கு இரண்டு ஓட்டுனர் இருக்க முடியாது. இருந்தால்! பேருந்து சரியான திசையில் செல்லாது. ஒரு பள்ளி கூடத்துக்கு இரண்டு தலைமை ஆசிரியர் இருக்க முடியாது, இருந்தால்! பள்ளியில் சரியான அறிவு போதிக்க படாது. ஒரு நாட்டுக்கு இரு தலைவர்கள் இருக்க முடியாது, இருந்தால்! நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. ஒரு குடும்பத்தில் இரண்டு தந்தைகள் இருக்க முடியாது, இருந்தால்! குடும்பம் நடத்த முடியாது. இதை எல்லாம் சிந்தித்தாலே கடவுள் ஒருவனே என்ற முடிவுக்கு வந்து விடலாம்.

சிந்திக்க கூடிய மக்களுக்கு குரான் பல அத்தாட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 1400 வருடத்துக்கு முன்பே குரானில் கூறப்பட்டுள்ள பல அறிவியல் அதிசயங்கள் தான் இன்றைய நவீன உலகில் கண்டுபிடிப்புகளாக கூறப்படுகிறது. ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகளை குரானுடன் ஒத்து பாருங்கள். அறிந்து கொள்வீர்கள், குரானில் கூறப்பட்டுள்ளதை தான் இவர்கள் கண்டு பிடிப்பு என கூறுகிறார்கள் என்று. சற்று சிந்தியுங்கள் நண்பர்களே! 1400 வருடங்களுக்கு முன்னாள், ஒருவர் கடலை பற்றி கூற முடியுமா? வின்வெளியை பற்றி கூற முடியுமா? ஒட்டகத்தை பற்றி கூற முடியுமா? மலையை பற்றி கூற முடியுமா? தேனீக்களை பற்றி கூற முடியுமா? காற்றை பற்றி கூற முடியுமா? பெண்களின் கர்ப்பப்பை பற்றி கூற முடியுமா? மனிதனின் பிறப்பு பற்றி கூற முடியுமா? எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்த FIROWN உடல் உலகம் அழியும் வரை பாதுகாப்பாக பாதுகாக்கப்படும் என்று கூற முடியுமா? (பல அறிவியல் விசயங்களை எல்லாம் விரிவாக எழுத வேண்டும் என்றால், ஒரு புத்தகம் அளவுக்கு எழுத வேண்டி வரும். குரான் கூறும் அறிவியல் என்ற தலைப்பில் வேண்டுமானால் தனியாக எழுதுவோம், இறைவன் நாடினால்...)


இன்னும் பல விசயங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதை எல்லாம் முஹம்மது(ஸல்) என்ற தனி நபரால் கூறுவது சாத்தியம் இல்லாத ஒன்று. இதை எல்லாம் எவன் படைத்தானோ அந்த படைப்பாளனுக்கு மட்டுமே தெரியும். அந்த ரகசியங்களைதான் குர்ஆனில், படைப்பாளன் கூறுகிறான். சொர்க்கம், நரகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கும் நண்பர்களே, சிந்தியுங்கள்! "வணங்குவதுக்கு தகுதியானவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்" என்ற வார்த்தை தான் சொர்க்கம் செல்ல GATE PASS. படைப்பாளன் நம்மிடமிருந்து எதிர் பார்ப்பது இந்த ஒரு வார்த்தையைத்தான். இதை சொல்ல பல மணி நேரம் கூட ஆகாது. மனதளவில் ஏற்று கொள்ளுங்கள்.

கடைசியாக ஒன்று கூறுகிறேன் நன்றாக கேளுங்கள்: அல்லாஹ்வை வணங்குங்கள் என்று நான் கூறவில்லை, உங்களையும் என்னையும், அனைத்தையும் படைத்த அந்த ஒரு படைப்பாளனை மட்டுமே வணங்குங்கள் என்றுதான் கூறுகிறேன். வாழும்போது நிராகரிப்பவர்களாக வாழும் நீங்கள், மரணிக்கும் போது அவ்வாறு மரணிக்க வேண்டாம் என்று நண்பன் என்கின்ற முறையில் உரிமையுடன் கூறிக்கொள்கிறேன். உங்கள் சிந்தனையை விசாலமாக்கி சிந்தியுங்கள். நேர்வழி பெறுவீர்கள். 

(படைத்தவனிடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்தவனாக) 

No comments:

Post a Comment