Pages

Saturday, March 17, 2012

என்ன படிக்கலாம்

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பான சகோதரர்களே! நமது வாழ்வில் பலதரப்பட்ட செய்திகளை, விசயங்களை படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். பள்ளி பருவத்தில் பள்ளி பாடங்களை படித்து மனதில் நிறுத்தியும்(!), கல்லூரி பருவத்தில் கல்லூரி பாடங்களை படித்து அதன் மூலம் நல்ல வேளையில் அமர்ந்தும், அதன் மூலம் பல அனுபவங்களை கற்று முன்னேறியும் வருகிறோம்; வந்தும் இருகிறார்கள்.
பள்ளி பருவம் முடிந்த மாணவர்களுக்கு நமது சமூதாய அமைப்புகளும் மற்றும் பல தொண்டு நிறுவனங்களும் அடுத்து என்ன படிக்கலாம் என்று போட்டி போட்டு கொண்டு (இங்கேயும் போட்டியா?) பாடம் நடத்துவார்கள். அதை போன்றே கல்லூரி பாடம் முடித்த மாணவர்களுக்கு நேர்காணலுக்கு (Interview) தயாராவது எப்படி என்றும் சொல்லி கொடுப்பார்கள். இந்த செயலுக்கு நிச்சயம் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். 

இங்கே, மக்களாகிய நாம் இம்மையில் நலம் பெற வேண்டும் என்று எடுக்க கூடிய முயற்சியில் எத்தனை சதவீதம் மறுமைக்கு முக்கியத்துவம் தருகிறோம். என்ன படிக்கலாம் என்று கேட்கின்ற சகோதரர்களிடம், எத்தனை சகோதரர்கள் குரானை படிக்கலாம் என்று கூறியதுண்டு. குரான் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நூல். குரானை ஓதுவதற்கு அல்லது படிப்பதற்கு வயது வரம்பு, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதெல்லாம் கெடையாது. அதில் இருப்பது நம்மை படைத்த கடவுளின் வார்த்தைகள். குரானை போன்று ஒரு புத்தகம் உலகில் இது வரை இல்லை என்பதை என்னால் சவால் விட்டு கூற முடியும். ஏன் என்றால் நம்மை படைத்த கடவுளே குரானில் சவால் விடுகிறானே: 

2:23 வது வசனத்தில் நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள வேதத்தில் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வை தவிர உங்கள் உதவியாளர்களை எல்லாம் அழைத்து வைத்து கொண்டு இது போன்று ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

2:24 - அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் - அப்படி செய்ய உங்களால் நிச்சயமாக முடியாது......

நாம் உலக அறிவை பெற்று கொள்ள எவ்வளவோ Encyclopedia களை பார்க்கிறோம். ஆனால் அதைவிட மகத்துவம் மிக்க குரானை எத்தனை தடவை பொருள் உணர்ந்து படித்து வருகிறோம். எத்தனையோ விஞ்ஞான கண்டுபிடுப்புகளுக்கு குரான் சான்றாக இருக்கிறது என்பதை ஏன் நம் மக்கள் உணர மாட்டேன்கிறார்கள். குரான் இறை வேதம் என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறதே. நம் மக்கள் இந்த குரானை படித்து அதை மக்களுக்கு ஏன் சொல்ல மாட்டேன்கிறார்கள். மற்ற எந்த புத்தகத்தையும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் படித்தால், "எத்தனை தடவைதான் இந்த ஒரே புத்தகத்தை படிகிறது. போர் அடிக்குது பா" என்று கூறுவோம் ஆனால் குரானை 1000 முறை படித்தாலும் போர் அடிக்குது என்று சொன்னவர் யாரேனும் உண்டா? 

நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்: குரானை ஓதுபவருக்கு ஒரு எழுத்துக்கு பத்து நன்மை உண்டு. 'அளிப்' 'லாம்' 'மீம்' என்பதை ஒரு எழுத்து என்று கூற மாட்டேன். 'அளிப்' ஒரு எழுத்து, 'லாம்' ஒரு எழுத்து, 'மீம்' ஒரு எழுத்து ஆகும். இம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளை பெறுவார். (திர்மீதி 2910)

இப்பேற்பட்ட நன்மைகளை அள்ளி தரக்கூடிய குரானை விட்டு விட்டு ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத குப்பைகளை படிகிரார்களே. இவர்கள் குரானை படிப்பதற்கு கொடுக்க கூடிய முக்கியத்துவத்தை விட கல்கி, குங்குமம், விகடன் என்ற புத்தகத்துக்குத்தான்  அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள். முக்கியத்துவம் தருவதில் ஆண்களை விட பெண்களே முன்னணியில் இருகிறார்கள் என்று நெனைக்கிறேன்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் குரான் என்பது பொக்கிஷம் என்று கூருவதலேயோ என்னவோ, ஒரு பொக்கிசத்தை மறைத்து யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதை போன்று, குரானுக்கும் பட்டு துணி போர்த்தி ஒரு மூலையில் மறைத்து வைத்து விடுகிறார்கள். இவர்களும் எடுத்து படிப்பதில்லை, மற்றவர்களையும் எடுத்து படிக்க விடுவது இல்லை. 

நான் அரபு நாட்டில் இருப்பதால் அங்கே கண்ட சில நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சில சகோதரர்கள் தங்களுடைய வீட்டுக்கு போன் செய்து பேசுவார்கள். பல மணி நேரம் பேசுவார்கள். பல விசயங்களை பற்றி கேட்டு அறிந்து கொள்வார்கள். இதை எல்லாம் பக்கத்துக்கு பெட்டில் படுத்து அல்லது உட்கார்ந்து கேட்டு கொண்டு (ஒட்டு கேட்டு இருக்கானே என்று நெனைகாதீர்கள். சத்தமா பேசினா என் காதுலேயும் விழுமே) இருக்க கூடிய நான் யோசித்ததுண்டு! என்னடா இது மார்க்கத்தை மக்களுக்கு சொல்லி கொண்டு இருக்க கூடிய சகோதரர்களும், நண்பர்களும் கூட தனது குடும்பத்தில் மார்க்கத்தை எந்த அளவு பின்பற்றுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லேயே என்று.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த குரானை அடிக்கடி ஓதி பாதுகாத்து கொள்ளுங்கள். முஹம்மதின் உயிர் தன கைவசம் வைதிருப்பவன் மீது சத்தியமாக (திரும்பத் திரும்ப ஓதி அதனை பாதுகாக்கவிட்டால்) அந்த குரான், கயிற்றில் கட்டப்பட்ட ஒட்டகம், அந்த கயிற்றிலிருந்து விலகி விரண்டு ஓடுவதை விட மிக வேகமாக உங்கள் உள்ளங்களை விட்டும் குரான் ஓடிவிடும். (புஹாரி 5033)

எனவே சகோதரர்களே, ஒட்டகத்தை தொலைத்து விட்டு வெறும் கையோடு நிற்பவனை போல் மறுமையில் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் இல்லாமல் வெறும் கையோடு நிற்க விரும்புகிறீர்களா? அல்பகரா மற்றும் ஆலஇம்ரான் ஆகிய இரண்டு அத்தியாயம் நமக்காக மறுமையில் பரிந்துரை செய்ய போட்டி போடுமே அந்த அத்தியாயங்களை ஓத விருப்பமில்லையா? நன்மைகளை குவித்துக்கொண்டு வைத்து இருக்க கூடிய குரானை விட்டு விட்டு மற்ற புத்தகத்தின் மீது எவ்வாறு உங்களுக்கு நாட்டம் செல்கிறது.

சகோதரர்களே! சிந்தியுங்கள். குரானை படியுங்கள். அதையே பரப்புங்கள். நன்மையை கொள்ளையடியுங்கள்.

(அல்லாஹ்விடம் மட்டுமே நன்மையை எதிர்பார்த்தவனாக)

No comments:

Post a Comment